வசந்தம் மலர்ந்தது 垒” 'பாவம். புள்ளெ ரொம் பப் பயந்து போயிருக்கு. சதா மயங்கி மயங்கி வருது... ஊம், சின்ன வயசிலேயே இப்படி யெல்லாம் அனுபவிக்கணும்னு அது தலையிலே எழுதியிருக்கும் போது யாரு என்ன செய்ய முடியும்!” என்று புலம்பினுள் அன்னே . வெற்றிலைச் சாற்றை வாயில் தேக்கியபடி கண்களை வெறும் வெளியில் நிறுத்தி, ஏதோ ஆழ்ந்த சிந்த ையில் லயித்துவிட்டவர் போலிருந்தார் பண்ணையார். வெற்றில்ே எச்சிலே ஊஞ்சலருகில் இருந்த படிகத்தில் துப்பிவிட்டு, 'வாறது வந்துதானே தீரும் என்ருர், என்ன தான் வரா மல் தடுத்துவிடலாம்னு தாகை முயற்சிகள் செய்யட்டும்: இல்லே, பக்கத்திலே இருக்கப்பட்டவங்கதான் நல்ல வழி காட்டட்டும், பிரயோசனப்படாது. அந்த வேளைக்கு என்ன நடக்கனுமோ, எப்படி எப்படி ஆகனுமோ அந்த விதமா நடக்கிறதுக்குத்தான் இசைந்து வருது மனுசாளுடைய எண் ணங்களும் காரியங்களும். கேடுகாலம் வரணும்னு இருந் தால், முன்னுலேயே புத்தி கெட்டுத்தான் போகுது. சும் மாவா சொல்லி வச்சாங்க பெரியவங்க-கேடுவரும் பின்னே, மதிகெட்டு வரும் முன்னேன்னு ஊம்ம்...எல்லாம் இப்படி நடக்கணும்கிறதுக்கு ஏற்றபடி தான் உன் மனசு இருந்தது. நீ ஒரே பிடிவாதமா இந்தக் கல்யாணத்தை நடத்தியே தீர்ப் பதுன்னு..." . அவரது ஞானப் பிரசங்கம் நீலாவதிக்குப் பிடிக்கவில்ல்ே, மகளுக்கும் ஒத்துக்கொள்ளவில்லையோ என்னவோ! அவள் திடீரென அலறிஞள்: ஐயோ...அம்ம்... அம். .அம்மாவ்' என்று. புள்ளெ கண்ணப் பாரு என்ன இப்படிச் சொருகிக் கிட்டுப் போகுது என்று பதறி எழுந்து பக்கத்தில் வந்தார் பண்ணேயார்.
பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/48
Appearance