உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 2. - - - வஞ்சி மூதூர் ஆன் பொருநையாற்றைக் கடந்து கரையேறியவர். காவற்காட்டைக் கடந்தபின்னரே வஞ்சிமாநகரை அடைதல் இயலும். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற சோழன், கருவூர் எனவழங்கப் பெறும் வஞ்சிமாநகரை, ஒரு காலத்தில் முற்றியிருந்தான். அது கண்ட புலவர் ஆலத்தார் கிழார், அவ்வளவன் பால் சென்று, வளவ! உன் வீரர்கள், தொழில் செய்து செய்து காய்ப்பு ஏறிய கைகளை கொண்ட கொல்லர் வாளரம் கொண்டு வடித்துக் கூர்மையாக்கிய கோடாலிகளால், கருவூர்க் கோட்டையின் காவற்காட்டு மரங்களை வெட்டி வீழ்த்துகின்றனர். மணம் கமழும் மலர் களை நிலையழிந்து அக்காவற்காட்டை அடுத்து ஒடும் ஆன் பொருநையாற்றில் வீழ்ந்து, அங்கு வெள்ளநீர் குவித்துச் சென்ற வெண்மணலைச் சி த ஹ் ப் பண்ணுகின்றன கோடாலி வீழ்ந்து வெட்டும் ஒசை, மதிவகத்திலுள்ள மன்னவன் காதுகளில் பாய்கிறது. இவ்வாறு காவற்காடு அழிப்டுவதைக் கண்டும். சிவந்து செருமேற்கொண்டு வரக் கருதிலன்: அத்தகையானொடு, மேலும் அமர்கொண்டு நிற்றல், ஆண்மையும் ஆற்றலும் வாய்ந்த அரசர்க்கு அறமோ, அழகோ ஆகாது என்க்கூறிய அறிவுரையால், கருவூர்க் கோட்டையில், காவாற். காட்டின் இடமும், இயல்பும் இனிது விளங்குவது அறிக." வஞ்சி மாநகரத்துப் புறநகர், ஏனைய நகரத்துப் புறநகர்களை போலவே காவற்காட்டிற்கும், மதிலைச்சூழ இருந்த அகழிக்கும் இடையே அமைந்திருந்தது. கடவுளர் உறையும் கோயில்களுக்கும், தவநெறி மேற்கொண்ட துறவிகளும், அறநூல் பல அறிந்து அறிவு வாய்ந்த ஆன்றோர்களும், மக்களை மாண்புடையவராக்கும் மதிநலம் வாய்ந்த பாக்களைப் பாடவல்ல புலவர்களும் வாழ்தற்கு ஏற்றஅறப்பள்ளிகளுக்கும், அவர்கள் இருந்து அறிவாராய்ச்சி மேற்கொள்ளும் மேடைகளுக்கும், புறநகர் அகநகர்மக்கள் பொழிலாடியும், புனலாடியும் மகிழ்தற்கேற்ற தன்மலர்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/12&oldid=888828" இலிருந்து மீள்விக்கப்பட்டது