உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வஞ்சி மூதூர் புகார் நகரத்துப் பூங்காக்களுள் ஒன்றான, உவவனத் தின் வனப்பினைக் கூறும் புலவர், பல்வகை மரங்களாலும், மலர்க்கொடிகளாலும் நிறைந்த, அந்த உவவனம், ஓவியப் புலவன் ஒருவன், தன் கை வண்ணம் எல்லாம் காட்டித் தீட்டிய ஒவியங்களால் நிறைந்த திரைச்சிலை போல் காட்சி அளிக்கும் என அழகுறக் கூறியுள்ளார். 'வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே ஒப்புத் தோன்றிய உவவனம்' х மணிமேகலை : 3 ; 167-169' வண்ணம் கலவாமல், வெறும் நேர்க்கோடும், வளை கோடும் கொண்டு வனப்பு மிக்க ஒவியங்களைத் தீட்டவும் பழந்தமிழர் வல்லராய் இருந்தனர். பாண்டியன் தலையாலங் கானத்து. நெடுஞ்செழியன் போர் மேற் கொண்டு சென்று போர்க் களத்தில் பாசறைக் கண் இருக்க, அவன் அரசமாதேவி, கோப்பெருந்தேவியார், அவனைப் பிரித்த வருத்தம் மேலிட, அரண்மனையில் மெல்லணையில் வீழ்ந்து கிடக்கும் நிலையைக் காட்ட வந்த புலவர், 'புனையா ஒவியம், கடுப்ப” (நெடுநல்வாடை :147) இருந்தாள் என்று கூறியதும், அத்தொடர்க்கு உரை செய்த ஆசிரியர், "புனையா ஒவியமாவது வண்ணங்களைக் கொண்டு எழுதாத வடிவம்” எனப் பொருள் எழுதி யிருப்பதும் காண்க. - . ஒவியங்களைச் சுவரிலும் திரையிலும் வரைவதோடு அமையாது, அதற்கு என்றே, தனி மாடங்களை அமைத்து, அதனுள் பல்வேறு ஓவியங்களைத் திரட்டிக் காட்சிப் பொருள்களாக வைக்கவும் பழந்தமிழர் அறிந்திருந்தனர். அத்தகைய மாடங்கள் சித்திரக்கூடம் என அழைக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/46&oldid=888935" இலிருந்து மீள்விக்கப்பட்டது