| \) வரதன் அவன் முகம் பெரிதும் வாட்டமடைந்திருந்தது. முரு கன் தன்னைக் குனியவைத்து முதுகில் குத்தியதை நினைக் கும்போதெல்லாம் அவன் கண்களில் நீர் ததும்பலா யிற்று. ஆதலால் அவன் அடிக்கடி தன் கண்களைத் துடைத்துக் கொண்டே யிருந்தான். அவன் அருகே யிருந்த சிறுவர்கள், அவன் வருந்துதலைத் தலைமை ஆசிரி யரிடம் உரைத்தனர். அந்த ஆசிரியர் வரதனை அருகே அழைத்து அவன் வருந்துவதின் காரணத்தை வினவினர். வரதன் அதற்கு விடையளிக்காமல் மேலும் மேலும் விம்மி அழத்தொடங்கினன். அப்போது, அங்கேயிருந்த சிறுவர்களில் ஒருவன், வரதனுக்கும் முருகனுக்கும் நேர்ந்த சண்டையைக் குறித்து விளக்கமாக உரைத்தான். சண்டையின் வரலாற்றினை நன்ருக உணர்ந்து கொண்ட அந்த ஆசிரியர் முதலில் முருகனுக்கு மூன்று அடிகள் பிரம்பினால் கொடுத்தனர் ; பிறகு வரதனையும் அவ்வாறே தண்டிக்க எண்ணி அவன் அருகே வந்து, ԹԾի Յ5 ոԾ) Ա_1 கீட்டும்படி கூறினர். அப்போது. வரதன், தன்கையை நீட்டாமலேயே கழுத்தைச் சாய்த்துக் கொண்டும், முகத்தைச் சுளித்துக் கொண்டும் சார், இனிமேல் செய்யவில்லை ; இனிமேல் செய்யவில்லை என்று சொல்லிக்கொண்டே நெடுநேரம் செல்லப்பிள்ளைபோல் அவரிடம் கொஞ்சலாயினன். அப்போது அந்த ஆசிரியர் அவனைத் தம் கண்களால் உருத்துநோக்கி, அடே வரதா, நீ இப்போது உன் Goj):55@Ü) !1 J நீட்டப்போகின்ருயா-அல்லது உன்னைத் துாணில் கட்டி உதைக்கவேண்டுமா ? என்று சொல்லிப். பிரம்பினை உயரத்துாக்கி அவனை அடிக்க முயன்ருர்.
பக்கம்:வரதன்.pdf/17
Appearance