24. வரதன் என்னவேண்டும் 2 சீக்கிரம் சொல் ; நேரமாகின்றது’ என்ருன். நேரமாகின்றது என்னும் சொல்லைக் கேட்டதும் வரதன் முகம் மறுபடியும் மாறுதல் அடைந்தது. ஏனெ னில், அவனுக்கு வீட்டின் நினைவு வந்துவிட்டது. ஆத லால் அவன், நாற்புறமும் சுற்றிப் பார்த்தான். அப் போது இருட்டும் சமயமாய் இருந்தது. அது கண்ட அச்சிறுவன், கண் கலங்கலாயினன். அவல்ை பேசுதற் கும் இயலவில்லை. வரதன் மனநிலை அறிந்த அவ்வாலி பன் அவனை வேறு கேள்விகள் கேட்காமல் தனக்கு விருப்பமான வேறு இரண்டு பொட்டணங்கள் கடைக் காரனிடம் பெற்றுக்கொண்டு அச்சிறுவனைக் கையில் பிடித்தவண்ணம் எங்கோ அழைத்துச் செல்லலாயினன். அந்தப் புதிய இளைஞன், தன்னை அழைத்துச் செல் கின்ற இடம் வரதனுக்கு விளங்க வில்லை. ஆதலின் அவன், சிறிது நேரங் கழித்து, அவனை நோக்கி, ஐயா நீங் கள் என்னை எங்கே அழைத்துச் செல்கின்றீர்கள் ? என வினவினன். இளைஞன்-தம்பி, உன் வீட்டுக்குத்தான் வரதன்-ஆனல், எங்கள் வீடு உங்களுக்குத் தெரி யுமா ? இளைஞன்-ஆம் நன்ருகத் தெரியும். இதைக் கேட்டதும் வரதனுக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாகிவிட்டது. ஆதலால் அவன், தன் கையி லிருந்த நுக்கலைத் தின்றுகொண்டே அந்த இளைஞனு டன் சென்ருன்.
பக்கம்:வரதன்.pdf/31
Appearance