காயா-பழமா ? 35 பர்களுக்குக் கொடுத்துத் தானும் உண்ணுவான். வர தன் நேற்றைய தினம்கூட ஏதோ இரண்டு அதிரசம் கொண்டுவந்தான். அப்போது, அவன் உன்னைக்குறித்து எவ்வளவு வருந்தினன் என்பது உனக்குத் தெரியுமா ? கண்ணன்-அப்படியா வரதன் நல்லவன்தான் ; எனக்கும் எத்தனையோமுறை தின்பண்டங்கள் கொண்டு வந்து கொடுத்திருக்கிருன். அன்றியும், ஒருநாள் நான் என் எழுதுகோலைப் போக்கடித்துவிட்டேன் ; ஆசிரியர் ஏதேனும் எழுதச் சொன்னல் என்ன செய்வது என்று வருந்தினேன். அப்போது வரதன், உடனே தன் புதிய பென்சிலை இரண்டாகக் கத்தியால் துண்டித்து எனக்குக் கொடுத்தான். முருகன்-ஆம் அவன் எனக்கும் எத்தனையோ முறை புத்தகம், பேன, பென்சில் முதலியன உதவியிருக் கின்ருன். அப்படி யிருக்கும்போது கண்ணு, நீ ஏன் வரதனிடம் பேசமாட்டேன் என்கின்ருய் ? கண்ணன்-முருகா, எனக்கு முன்பு வரதனிடம் கோபம் இருந்தது. இப்பொழுது கொஞ்சமும் இல்லை. ஆனல், இத்தனை நாள் பேசாமல் இருந்து இப்போது திடீரென்று எப்படிப் பேசுவது ? அவனே முதலில் வந்து பேசினுல் அப்போது பேசலாம் என்று எண்ணுகின்றேன். ஆல்ை, அவன் இப்போது என்னைக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. முருகன்-ஓ ! உன்னிடம் அவன் எத்தனை முறை வலியப் பேசுவான் ? இப்போது நீ தான்.முதலில் ப் பேசவேண்டும். நானும் அப்படித்தான் செய் பாகின்றேன்.
பக்கம்:வரதன்.pdf/42
Appearance