氰 வல்லிக்கண்ணன்
பிறுவிறுப்பான கதை சுவாரஸ்யமான சம்பவ விவரிப்புகள்.
அடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வளர்க்கப்படும் கதைப்பின்னல். கிளுகிளுப்பூட்டும் காதல் நிகழ்ச்சிகள் அங்கங்கே ரசமாகச் சிதறிவைக்கப்படுகிற சிருங்கார (செக்ஸ் வர்ணிப்புகளும் விவரிப்புகளும் மற்றும் மர்மங்கள். திடுக்கிட வைக்கும் திகில் விஷயங்கள். இவ்விதமான உள்ளடக்கம் வாசகர்களை கிறுகிறுக்கச் செய்தன. -
இத்தகைய நாவல்களை விரும்பிப்படித்த பெரியவர்கள் கண்டிப்பாக ஒரு விதி செய்வது வழக்கம். சின்னவர்கள் (பள்ளியில் படிக்கிற பையன்கள் இந்த நாவல்களை எல்லாம் படிக்கவே கூடாது என்று. ஆனாலும் பையன்கள் புத்தகங்களை மறைத்து வைத்துப் படித்து ரசித்து அவை பற்றிப் பேசி மகிழ்ந்து கொண்டு தான் இருந்தார்கள்.
வடுவூரார், ஆரணி, ஜே. ஆர். ரங்கராஜூ முதலியவர்கள் எழுதியவை சமூக நாவல்களா, சரித்திர நாவல்களா, துப்பறியும் மர்ம நாவல்களா என்று யாரும் கவலைப்பட்டதில்லை. படிப்ப தற்கு சுவையான - பொழுது போக்குவதற்கு ஏற்ற - விறுவிறுப்பு நிறைந்த கதைப்புத்தகங்கள் என்றுதான் அவை விரும்பிப்படிக்கப் பட்டன. அவற்றை ரொமான்டிக் நாவல்கள் என்று சொல்லலாம். மிகுகற்பனை கொண்ட கற்பனாலங்காரக் கதைகள். சகல விதமான சமாச்சாரங்களும் அவற்றில் சுவாரஸ்யமாகக் கலக்கப்பட்டிருந்தன. அவை சொந்தச் சரக்குகளாக இருந்ததும் இல்லை. ஆங்கி லத்தில் கிடைத்த பல்வேறு மேல்நாட்டுக் கற்பனைகளையும் சொந்த அளப்புகளுடன், சுவையோடு கலந்து தந்தார்கள்.
அந்த ட்களில் பிரபலமாகயிருந்த ஜி. டபிள்யு. எம். ரெயி னால்ட்ஸ் நாவல்களின் வெற்றிகரமான தழுவல்களாக இருந்தன. மிஸ்டரீஸ் இன் தி கோர்ட் ஆஃப் லண்டன் என்பது காளிங்க ராயன் கோட்டை ரகசியங்கள் என்றும் பிரான்ஸ் ஸ்டேச்சுயூ ஆர் தி விர்ஜின் கிஸ் என்பது வெண்கலச்சிலை அல்லது கன்னியின் முத்தம் என்றும் தமிழில் வந்தன. அப்புறம் வடுவூரார் தேர்ந்துவிட்டார். இப்படி வெளிப்படையாகத் தழுவுவதில்லை. தமிழ்நாட்டு வாசகர்களின் டேஸ்டுக்குத் தக்கபடி கலப்பட சங்கதி களைத் தயாரித்துக் கொடுப்பதில் மன்னரானார். கிளுகிளுப் பூட்டும் செக்ஸ் சமாச்சாரங்களைத் தாராளமாகச் சேர்க்கவும் தயங்கவில்லை.
வடுவூரார் சரித்திரநாவல் என்று எதுவும் எழுதவில்லை. காளிங்கராயன் கோட்டை ரகசியங்கள் என்பதை வேண்டு மானால் நாவல் அபிமானிகள் சரித்திர நாவல் என்று கருதி யிருக்கலாம்.
ஆரணி குப்புசாமி முதலியார் நாவல்களில் கற்கோட்டைகள்,