2ö வல்லிக்கண்ணன்
சிறுகதைகள் மிகுதியாகவே எழுதப்பட்டன. பத்திரிகைகளிலும் வெளிவந்தன. காலஓட்டத்தில் இவை குறைந்துபோயின. வேறு நோக்குகளும் போக்குகளும் சிறுகதையில் இடம் பிடிக்கலாயின.
1950களில், ஏற்கனவே தமிழில் வெளிவந்த சிறந்த காந்தியச் சிறுகதைகளை (பல்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை) தொகுத்து காந்திவழிக்கதைகள் என்ற பெயரில் ஒரு பெரிய புத்தகமாக சர்வோதயப்பண்ணை வெளியிட்டது. இது ஒரு சிறப்பான தயாரிப்பு.
காந்திய வழிகளை எடுத்துச்சொல்லும் நாவல்கள் பின்னரும், அவ்வப்போது தமிழில் வெளிவந்துள்ளன. ந. சிதம்பரசுப்ரமண்யம் எழுதிய மண்ணில் தெரியுது வானம், நா. பார்த்தசாரதியின் "ஆத்மாவின் ராகங்கள் எம்.எஸ். கல்யாணசுந்தரம் எழுதிய இருபது வருடங்கள் விசேஷமாகக் குறிப்பிடப்பட வேண்டியவை. கவிதையில் சுப்பிரமணிய பாரதியார் காந்தியைப் போற்றிப் பாராட்டி வாழ்த்தினார். அவருக்குப்பின் வந்த கவிஞர்கள் காந்தியக் கொள்கைகளைச் சிறப்பித்துக் கவிதைகள் இயற்றியுள் ளனர். நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளையின் கவிதைகள் விசேஷமானவை.
காந்தியக்கொள்கைகளை வலியுறுத்தும் நாடகங்கள் பல எழுதப்பெற்று மேடைகளில் நடிக்கப்பட்டது உண்டு. காலத்தில் தாக்குப்பிடித்து நிற்கும் இலக்கியப்படைப்புகளாக அவை அமைய வில்லை.
மணிக்கொடி எழுத்தாளர் சி.சு.செல்லப்பா காந்தியக் கொள்கைகளில் அழுத்தமான பற்றுதல் கொண்டவர். அத்தாக் கத்தில் அவர் பல சிறுகதைகள் படைத்திருக்கிறார். அவை சத்யா கிரகி என்ற தொகுப்பாகப் பிரசுரம் பெற்றன.
அண்மையில் அவர் சுதந்திர தாகம் என்ற பெரிய நாவலை எழுதி வெளியிட்டிருக்கிறார். மூன்று பாகங்கள் கொண்ட இந்த நாவல் இந்திய விடுதலைப் போராட்டம் பற்றிய ஒரு ஆவணமாக அமைந்திருப்பதுடன், காந்திஜியின் உயர்தன்மைகளையும், காந்திய வழிமுறைகளின் மேன்மையையும், அம்மாபெரும் தலைவர் காட்டுகிற வழியில் செயலாற்றிய தொண்டர்களின் பெருமை களையும் நன்கு எடுத்துச் சொல்லும் வரலாறாகவும் விளங்குகிறது. தாமரை - மே 1980
●