மணிக்கொடிக்குப்பின் இலக்கியப் பத்திரிகைகள்
திமிழ் மறுமலர்ச்சி இலக்கியத்தின் வெள்ளி முளைப்பு என்று கூறிக்கொண்ட மணிக்கொடி தனிமனிதனுடைய மனசாட்சியை உழக்கி, அறிவுச்சுடரைக் கொளுத்தி சிந்தனா சக்தியை வளர்த்து, போலிக்கருத்துக்களையும் போலி ஆசாரங்களையும் அழித்து, சமூகத்தைச் சீர்திருத்துவது, பாரதி வகுத்த வழியில் தமிழை வளப்படுத்தி இளைஞர்களை இலக்கியத் தொண்டில் ஈடுபடச் செய்வது என்ற நெறி களைக் கடைப்பிடித்தது.
நாடு நெடுகிலும் கனன்று கொண்டிருந்த தேசீய உணர்வும் சுதந்திர வேட்கையும் மணிக் கொடியையும் அதன் எழுத்தாளர்களையும் ஆட்கொண்டிருந்தன. பத்திரிகைகளின் போக்கில் அந்நாட்களில் காணப்பட்ட அடிப் படைத் தன்மைகளிலிருந்து மாறுபட்ட தீவிர மான, இலக்கிய நோக்கை மணிக்கொடி வளர்த்தது.
அக்காலகட்டத்தில் பத்திரிகைகள் மேற் கொண்டிருந்த இலக்கிய நோக்கை, பொதுவாக மூன்று பிரிவுகளில் அடக்கலாம் என்று கு.ப. ராஜகோபாலன் ஒரு கட்டுரையில் குறிப் பிட்டிருக்கிறார்.