உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3 வல்லிக்கண்ணன் கதைகள்


காத்தலிங்கத்தின் துணையாய்- தோழனாய்- முன்னோடியாய், சதா அவனை விட்டுப் பிரியாமல் இருந்தது கறுப்பன் எனும் நாய். அதை அவன் மிகுந்த அன்போடு சீராட்டிப் போற்றி வளர்த்து வந்தான். ஒரு சமயம் தோட்டக்காரன் ஒருவனின் நாய்க்கும் கறுப்பனுக்கும் சண்டை ஏற்பட்டது. தனது நாயைத் தாக்கியதால் ஆத்திரம் கொண்ட தோட்டக்காரன் கறுப்பன் மீது கற்களை வீசினான். ஒரு கல் நாயின் காலைக் காயப்படுத்தியது. அதை அறிந்த காத்தலிங்கம் தோட்டக்காரனுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான். அதற்காக அவனோடு சண்டை பிடிக்கவில்லை. அவன் நாயைப் பிடித்து அதன் இரண்டு கால்களையும் முறித்து அனுப்பினான். ‘இதுதான் நியாயம்’ என்று பெருமையாகப் பேசவும் பின்வாங்கவில்லை.

காத்தலிங்கத்தின் நியாய உணர்ச்சிக்கு இது ஒரு ‘சாம்பிள்’ ஆகும். முன்பெல்லாம் அவன் தினசரி இரவு நேரங்களில் பாட்டு எனும் பெயரால் ஊளையிட்டுத் திரிவது வழக்கம். ரோட்டடி வீட்டுக்காரி, ரோசாப்பூச் சீலைக்காரி என்பதும், சாலையிலே ரெண்டு மரம், சர்க்காரு வச்சமரம்; உனக்கேத்த தூக்குமரம், தங்கமத் தில்லாலே’ என்ற பாட்டும் அவனுக்கு அதிகம் பிடித்தவை. காட்டுக் கூப்பாடு போடுகிற ஒலி பெருக்கி மாதிரி அவன் அவற்றைக் கதறிக் கொண்டு தெருவில் நடக்கிறபோது, வீடுகளுக்குள்ளே துங்குகிறவர்கள் விழிப்புறாமல் இருக்க முடியாது.

‘காத்தலிங்கம், நீருபாடுறது ஜோராகத்தானிருக்கு. பாட்டும் அருமையான பாட்டுதான். இருந்தாலும் கொஞ்சம் மெதுவாகப் பாடக்கூடாதா வேய்? நடு ராத்திரியிலே தூக்கத்தைக் கெடுக்கும்படியாக...’ என்று பெரிய