உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 - - வல்லிக்கண்ணன் "ஐயோ வேங்கைப் புலி வா அக்கா, வந்து விடு. சீக்கிரமா வா!' என்று இரு சிறுமிகளும் பெரியவளைப் பிடித்து இழுத்தனர். அவளுக்கு ஏழு அல்லது எட்டு வயசு இருக்கலாம். குறு குறு விழிகளும் குறும்புச் சிரிப்பும் அவள் முகத்தில் சிறப்பான வசீகரம் சேர்த்துக் கொண்டிருந்தன. சரிதாம் மாமா, ரொம்ப அலட்டிக்காதீங்க!” என்று அமைதியாகச் சொன்னாள். அவசரம் இல்லாமலே வெளியேறினாள். "என்ன திமிர் பாரேன் இந்தப் புள்ளைக்கு!’ என்று பொறுமினார் அவர். சொக்கலிங்கம் அந்த இடத்துக்குக் குடிவந்து பத்து தினங்கள் ஆகியிருக்கலாம். அது தனியாக அமைந்த ஓர் அறை. சிறு கூடம் மாதிரியோ, பொழுது போக்குவதற்கு உரிய மடம் போலவோ கட்டப்பட்டு, பின்னர் ஒருவர் இருப்பதற்கு வசதியான அறையாக மாற்றப்பட்டிருந்தது. அதுவும், சூழ்நிலையும், அங்கு நிலவிய அமைதியும் அவ ருக்குப் பிடித்திருந்தன. தொல்லைகளாக விளங்கக் கூடிய எதுவும் அங்கே இல்லை என்ற திருப்தி அவருக்கு ஏற் பட்டிருந்தது. இன்றைக்குத்தான் அவரது திருப்தியையும் அமைதியையும் கெடுப்பதற்கென்றே கூச்சலும் குதியாட்டமு மாக வந்து சேர்ந்திருந்தன குழந்தைகள். - குரங்குகள்! எந்த வீட்டைச் சேர்ந்த மூதேவிகளோ தெரியவில்லை. இங்கே வந்து தொல்லை கொடுக்கின்றன. வீட்டுக்காரரிடம் சொல்லி வைக்கவேண்டும்’ என்று அவர் மனம் முணுமுணுத்தது. அவருக்குப் பிடிக்காத விஷயங்கள் பல. அவற்றிலே குழந்தைகளும் முக்கிய இடம்பெறும். அவர் தனியாக வாழ்க்கை நடத்தினார். படிப்பதிலும் எழுதுவதிலும் ஊர்