உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கதைகள் 25. 'ஏய் உன்னைத் தானே...' அவள் கோபம் கொண்டவள்போல் முறைத்துப் பார்த். தாள். "கூப்பிடுறதைப் பாரேன்! இப்படி எல்லாம் என்னைக் கூப்பிடப்படாது என்று கண்டிப்புக் குரலில் அறிவித்தாள். அவளது பெரிய மனுவித் தோரணை அவருக்குச் சிரிப்பு உண்டாக்கியது. இப்ப என்ன இளிப்பு வாழுது இ ஹி ஹியின்னுட்டு.” அவள் மேலும் பேசியிருப்பாள். வெளியேயிருந்து வெடித்தது அழைப்பு: 'பத்மா... ஏ பத்மா...' 'இதோ வாறேன்மா’ என்று கூவியபடி, விழுந்தடித்து ஓடினாள் அவள். "சரியான குரங்கு... வந்தது ஒரு மாதிரி தொலைஞ்சுது சனி' என்று அவர் மனம் ஆறுதல் அடைந்தது. ஆனால், சிறிது நேரத்திலேயே பத்மா திரும்பி வந்து விட்டாள். அவள் கையில் ஒரு தட்டு இருந்தது. அதில் எதையோ வைத்து மூடி எடுத்து வந்தாள். இதில் என்ன இருக்குதாம், சொல்லிடுங்க பார்க்கலாம் என்று சவால் விடுத்தாள். "என்ன இருக்கோ, எனக்கு எப்படித் தெரியும்? "எனக்குத் தெரியுமே-உங்களுக்கு எதுவுமே தெரியாது. ஆமா!' என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு, 'இந்தாங்க, சாப்பிடுங்க. அது தெரியுமில்லே! என்று கேட்டாள். அவள் தலை அசைப்பும் பேசும் பாணியும், நடந்து கொள்ளும் சுபாவமும், இயல்பான துணிச்சலும் அவருக்கு