வல்லிக்கண்ணன் 40% "மானிட சமுத்திரம் நான்' என்று கூவும் மன எழுச்சி அவனுக்கு ஒரு சமயம் கூட ஏற்பட்டதில்லை. - மாறாக, எங்கும் எப்போதும் அவன் தனிமையையே அனுபவித்தான். நான் தனி என்ற உணர்வு, முட்டைக் குள் ஒடுங்கிக் கிடக்கும் சிறு குஞ்சுக்குப் போர்வையாய், பாதுகாப்பாய், தனி வீடாய் அமைந்துவிடும் முட்டை ஒடு' மாதிரி அவனைச் சுற்றி அருவமான ஒரு கோட்டை கட்டிக் கொண்டது. அதுவே அவனுக்கு வேலியாய் சிறை யாங் அமைந்தது. - அதனால், ஜனநெரிசல் மிகுந்த ரயிலடியிலும், கும்பல் நிறைந்த தியேட்டர்களிலும், கூட்டம் அதிகமுள்ள ஓட்டல் களிலும், மக்கள் நடமாட்டம் மிகுதியாக உள்ள வீதிகளி இசம் கூட தனிமையைத் தான் உணர்ந்தான் அவன். தனிமை அவனது மன நோய் ஆகிவிட்டது. எனவே, அவன் எங்கும் எதிலும் எல்லோரிடமும் வெறுமையையே காண முடிந்தது. பிறரது சிரிப்பும், கூச்ச.இம், குழந்தை குட்டிகளோடு பெரியவர்கள் பேசி விளையாடிக் களிப்பதும், அர்த்தமற்றதாய், பைத்தியக்காரத் தனமாய், உளறலாய், கேலிக் கூத்தாய் அவனுக்குப் பட்டன. அவன் உணர்ச்சிகளைப் புறக்கணித்து, அறிவை வழி பட அவாக் கொண்டவன். ஆகவே, பிறரது உணர்ச்சிகளை மதிக்கவோ, சரியாகப் புரிந்து கொள்ளவோ, அவன் அக். கறை காட்டவில்லை. அவனுள் வளர்ந்த விரக்தி எங்கும் வெறுமையைக் காணத்தான் உதவியது அவனுக்கு. இப்படி வருஷம் வருஷமாகக் கடந்து விட்டான். சார மற்ற வாழ்க்கை, இதை சுமந்து கொண்டு, "நேற்றுப்போல்
பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/50
Appearance