பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

IO குறளுக்குள்ளும் இருந்தது. இருக்கிறது. இந்த உணர்வும் திணறலும் , குறளைப் படித்த

எல்லோருக்குமே இருந் திருக்கிறது. இன்னும் படிக்கப் போகின்ற எதிர்காலத்தினருக்கும் வரும்.

o

‘உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப வள்ளுவர் வாய் மொழி மாட்டு’

என்று செயலூர்க் கொடுஞ் செங் கண்ணார் என்ற புலவர் பாடியது, அவர் அனுபவித்துக் கூறியதற்குச் சான்றாகும்.

விளையாட் டுச் சிந்தனைகள் வள்ளு வருக்கு இருந்ததா என்பதை அறிந்து கொள்ளத்தான் ஆயிரம் முறைப் படித்தேன் என்று கூறியிருந்தேன்.

எனக்குக் கிடைத்ததோ ஏராளமான சிந்தனைகள். அத்துடன் என் மனம் அமைதி கொண்டு விட்டதா என்றால், அமைதியிழந்து ஆரவாரித்த வண்ணமே இருந்தது என்பதுதான் உண்மையான நிலவரமாகும். எந்த நூல் எழுத ஆரம்பித்தாலும் , என்னுள்ளே ஆக்ரமித்துக் கொண்டு விட்ட வள்ளுவரும் , எழுதித்தான் ஆக வேண்டும் என்று ஆணையிடுவது போல், அவ்வப் பொழுது பல புதிய, புதுமையான சிந்தனைகளைப் புரள விட்டுக் கொண்டே இருந்தார்.

விளையாட்டு நூல்கள் மட்டுமே எழுதத் தெரிந்தவன் என்று என் பெயருக்கு, ஒரு தனி முத்திரை குத்தி வைத்திருக்கிறது தமிழ்ச் சமுதாயம்.

விளையாட்டுக்கள் பற்றி எழுதுகிறேன் என்றால்,

அவை விளையாட்டு இலக்கியம். அதிலும் தமிழ் இலக்கியம். தமிழுக்குப் புதிய துறை விளையாட்டுத்