பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

34

3. குருவும் திருவும்!

குருவை வணங்க வேண்டும்; அவர் சொற்களுக்கு இணைங்க வேண்டும். அவர்

பணித்ததைத் தொடர வேண்டும் என்றால், அவரின் திருவும் உருவும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பதைத் தான் வள்ளுவர், மிக விரிவாக, மிகத் தெளிவாகப் பாடியிருக்கிறார்.

கடவுள் வாழ்த் தை, குரு வணக்கம் என்று கூறினோம். கடவுள் வாழ்த்துத் தலைப்பு பற்றி, பரிமேலழகர் கூறிய விளக்கத்தை இங்கே அப்படியே எடுத்துத் தந்திருக்கிறோம்.

‘கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்டு, ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ் வாழ்த்து, ஏற்புடைக் கடவுளை யென அறிக: என்னை? சத்துவ முதலிய குணங்களான, மூன்றாகிய உறுதி பொருட் டு, அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு, இயைபு உண்டாகலான், அம் மூன்று பொருளையும்