கதைகள்’ என்ற அருமையான பெரிய தொகுப்பாகப்
பிரசுரம் பெற்றன.
பலரகமான புத்தகங்களையும், விஷவிருட்சம்' 'துர்கேசநந்தினி போன்ற வங்க மொழி நாவல்களின் தமிழாக்கங்களையும் வெளியிட்டு தமிழ்ப்பணி புரிந்து கொண்டிருந்த அல்லயன்ஸ் கம்பெனி தமிழ் நாட்டுச் சிறுகதைகள்’ என்ற வரிசையில் தொடர்ச்சியாக ச் சிறுகதைத் தொகுதிகளை வெளியிடத் திட்டமிட்டுச் செயலாற்றியது.
"ராஜாஜி குட்டிக்கதைகள்' 'வ வெ. சு. ஐயர் கதை கள், த. நா. குமாரசுவாமியின் கன்னியாகுமரி முதலிய க தைகள்', தி. ஜ. ரங்கநாதனின் சந்தனக் காவடி கு.ப. ராஜகோபாலனின் கனகாம்பரம்’, ந.சிதம்பரசுப்ரமண்யன் எழுதிய சக்கரவாகம் ஆகிய தொகுதிகள் வெளிவந்தன. பின்னர், கால இடைவெளி விட்டு விட்டு, அநேகரது சிறுகதைகள் தொகுப்புகளாக அல்லயன்ஸ் கம்பெனியால்
பிரசுரிக்கப்பட்டன.
சரத் சந்திரர் நாவல்கள் பலவும் மொழிபெயர்க்கப் பட்டுப் புத்தகங்களாக வெளி வந்ததும் இக்காலகட்டத்தில் தான்.அவை தமிழ் வாசகர்களால் பெரிதும் விரும்பி வாசிக்கப்பட்டன.
சரத் சந்திர சாட்டர்ஜி, பங்கிம் சந்திர சட்டோபாத்யாயர், பிரேம் சந்த் ஆகியோரது நாவல்கள், பத்திரிகைத் தொடர் கதைகளாகவும் புத் தகப்
இ வாசகர்களும் விமர்சகர்களும் 37