உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 47 கொடுத்துவிட்டேன். என் கடிதம் மேலதிகாரிக்குப்போய் அங்கீகாரம் பெற்று வருவதற்கு ஒரு மாத காலம் ஆயிற்று. பூநீவைகுண்டம் வந்து ஒரு வருடம் ஏழு மாதங்கள் பணிபுரிந்த பிறகு நான் அந்த வேலையிலிருந்து வெளியேறினேன். அரசுப் பணியில் சேர்ந்து, மூன்று வருடங்கள் ஏழு மாதங்கள் போக்கிவிட்டு வேலையற்றவனாகத் திருநெல்வேலி சேர்ந்தேன். நான் அப்படி வேலையை உதறிவிட்டு வந்தது என் உறவினர்களுக்குப் பிடிக்கவில்லை. முக்கியமாக, எனக்கு வேலை வாங்கித் தந்த பெரியவர் என் போக்கை வெறுத்தார். சொந்தக்காரர் ஒருவர் உபதேசம் புரிந்தார். நீ வேலையை விட்டது தப்பு நீ எல்லாம் எழுதி முன்னுக்கு வரமுடியாது. ஒரு வேலையில் இருந்து கொண்டு, உன் மனத்திருப்திக்காக எழுதலாம். ஆபீஸ் வேலை பிடிக்கவில்லை என்றால், சின்னதாக ஒரு கடை வைத்துக் கொண்டு பிழைக்க வழி தேடு. கூட உன் விருப்பம் போல் எழுது, பத்திரிகை ஆபீசில் சேர்ந்து முன்னேறி விடலாம் என நினைப்பது வெறும் கனவு தான். நம்மைப் போன்றவங்களாலே சொந்தமாகப் பத்திரிகை நடத்தி உயரவும் முடியாது. அதுக்கு நிறையப் பணம் வேணும்' என்று நீண்ட நேரம் பேசினார் அவருக்குப் பத்திரிகைத் துறை அனுபவம் இருந்தது. இலங்கை போய், கொழும்பு 'வீரகேசரி பத்திரிகையில் பல வருடங்கள் பணிபுரிந்துவிட்டு, வெறும் ஆளாக ஊர் திரும்பி வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். எனக்கு நல்லுரை கூற அவருக்கு உரிமையும் தகுதியும் இருந்தன. ஆயினும், எவருடைய நல்லுரையையும் கேட்கும் நிலையில் நான் இருக்கவில்லை. என் உள்ளத்தில் ஒரு உறுதி படிந்திருந்தது. நான் எப்படியும் எழுத்தாளனாக வளர்ந்தே தீர்வேன் என்று. நான் அரசுப் பணியைத் துறந்துவிட்டது என் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை தான். சரி, உன் இஷ்டம் போல் எழுதி முன்னேறு என்று என் அண்ணா கோமதி நாயகம் ஆதரவு தந்தார். இருக்கிற வேலையை விட்டுப்போட்டு, இனிமேல் என்ன பண்ணப் போகிறானாம் என்று பெரிய அண்ணா கலியாணசுந்தரம் விமர்சித்தார். என்ன செய்து எப்படி முன்னேறுவது என்ற எண்ணமே எனக்கு இருந்ததில்லை. எழுத வேண்டும், நிறையப் படிக்க வேண்டும் என்ற உறுத்தலே என்னுள் சதா வேலை செய்தது. நான் பூரீவைகுண்டத்தில் தங்கியிருந்த காலத்தில் நல்ல புத்தகங்கள் வாங்கிப் படிக்க வாய்ப்பு கிட்டியது. நல்ல நூல்களை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருந்த நவயுகப்பிரசுராலயம் தொடர்ந்து எட்டணா விலையில் சில புத்தகங்களைத் தான் பிரசுரிக்க முடிந்தது.