வல்லிக்கண்ணன் డ్లవీ என்ற கொள்ளையனாக மாறினான். ஒரு ஆசாரி செய்த நாட்டுத் துப்பாக்கி அவனுடைய ஆயுதம் ஆயிற்று. துணைக்கு ஒருவனும் சேர்ந்தான். இரண்டு பேரும் குறுகிய காலத்தில் பெரும்பெயர் பெற்றுவிட்டார்கள். போலீஸார் கையில் அகப்படாமல் சாகசச் செயல்கள் புரிந்து திரிந்தார்கள். கடைசியில் இருவரும் பிடிபட்டார்கள். அவர்களைக் கைவிலங்கு மாட்டி போலீசார் வீதி வழியே இட்டுச் சென்றார்கள். 'விவசாய ஆபீஸ்' முன்பக்கமாகப் போகையில் காசித்தேவனை நான் பார்த்தேன். வீரநாயகனாக அவன் உருவம் பெற்றிருக்கவில்லை. சற்று உயரமாய் மெலிந்த உடல் பெற்ற சாதாரண நபராகத்தான் தோற்றம் அளித்தான். கொள்ளையனின் பராக்கிரமச் செயல்களைக் கேள்விப்பட்டிருந்த எனக்கு அவனது தோற்றம் ஏமாற்றமே தந்தது. பூரீவைகுண்டம் பற்றி இன்னொரு முக்கிய விஷயமும் குறிப்பிடத்தக்கது ஆகும். நவதிருப்பதிகளில் ஒன்று எனப் புகழ் பெற்றிருந்த அந்த ஊரில் மிகப் பிற்போக்குத்தனமும் அநாகரிகமுமான ஒரு வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்த ஒரு இனத்தினர் கோட்டை கட்டி வசித்தார்கள். கோட்டைப் பிள்ளைமார் என அறியப்பட்டிருந்த அவ் இனத்தார் பல தலைமுறைகளாகத் தனித்து ஒதுங்கி வாழ்ந்து வந்தார்கள். பண்டைக்கால முறைப்படி அமைக்கப்பட்ட மண்கோட்டை, அதனுள் ஒரு தனி ஊர் போல் அநேக குடும்பங்கள் வாழ்ந்தன. நான் அங்கிருந்த நாட்களில், அறுபது குடும்பத்தார் கோட்டைக்குள் வசித்தாகச் சொன்னார்கள். இந்த இனத்தைச் சேர்ந்த ஆண்கள் வெளியே வருவார்கள் ஊர்வழி போவார்கள் பகலில், வெளியே அவர்கள் அமைத்துள்ள வீடுகளில் பொழுது போக்குவார்கள் தொழில் புரிவார்கள். சொந்தமாக வைத்திருந்த வயல்களில் விவசாய அலுவல்களை மேற்பார்ப்பார்கள். அவர்களில் நன்கு படித்து வக்கீல்களாகவும், அரசு அலுவலகங்களில் பணிபுரிகிறவர்களாகவும் வாழ்ந்தவர்களும் உண்டு. சென்னை, கோயமுத்தூர் போன்ற பெரிய நகரங்களுக்குப் போய் வந்த சமூகப் பிரமுகர்களும் இருந்தார்கள். ஆயினும், 'கோட்டைப்பிள்ளைமார் இனப் பெண்கள் மிகுந்த கட்டுப்பாட்டுக்கு ஆட்பட்டிருந்தார்கள். அவர்கள் வெளி உலகுக்கு வர அனுமதிக்கப்பட்டதில்லை. சிறுமியர் கூடக் கோட்டை வாசலுக்கு வெளியே அடிஎடுத்து வைக்கக் கூடாது என்ற கண்டிப்பு இருந்தது. எப்பவோ ஒரு குமரிப்பெண் வடக்குக் கோட்டை வாசல் வழியாக வெளியே போய் வந்து கொண்டிருந்தாளாம் அவளுக்கும் வேற்றுச் சாதி இளைஞன் ஒருவனுக்கும் தொடர்பும் காம உறவும் ஏற்பட்டிருந்ததாம். அதை அறிந்ததும் பெரியவர்கள் இரவோடு இரவாக அந்தப் பெண்ணை வெட்டிக்
பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/50
Appearance