பக்கம்:வாழ்க்கை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

9


‘மனிதன் இறைவனுடைய விதியைப் பின்பற்றி நன்மையடைவதற்காக இறைவன் அவன் நாசித் துவாரங்களின் வழியாக ஊதியுள்ளதே வாழ்க்கை’ என்று யூத முனிவர் கூறினர்.

ஆசைகளை அடக்கி அருந்தவம் இயற்றிய வேறு பெரியார்கள், ‘பகுத்தறிவுக்குப் பணிந்து அதன்படி நடப்பதே வாழ்க்கை ; அது மக்களுக்கு இன்பமளிக்கும்’ என்று தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்து பெருமான், முந்திய விளக்கங்களை யெல்லாம் ஒன்று சேர்த்து, ‘ஆண்டவனையும், உன் அண்டையிலுள்ளவரையும் நேசித்தலே வாழ்க்கை. அது மனிதனுக்கு இன்பம் தரும்’ என்று சொன்னார்.

வாழ்க்கையைப் பற்றிய ஆன்றோர் விளக்கங்கள் இப்படி யிருக்கின்றன. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக மனித வாழ்வின் முரண்பாட்டை இவை தீர்த்து வைத்திருக்கின்றன. போலியான தனி வாழ்வின் பொய்மையான இன்பத்திற்குப் பதிலாக, உண்மையான, அழிக்க முடியாத இன்பத்தை எடுத்துக்காட்டி, அந்த வாழ்வுக்குப் பொருத்தமான அர்த்தத்தையும் இவை அளித்திருக்கின்றன. இந்த உபதேசங்கள் வெறும் தத்துவங்கள் அல்ல ; கோடிக் கணக்கான மக்கள் இவைகளின் உண்மையைத் தங்கள் வாழ்க்கையிலேயே அநுபவத்தில் கண்டிருக்கின்றனர்; இன்றும் கண்டுகொண்டிருக்கின்றனர். இந்த விளக்கங்களை இன்னும் தெளிவாகவோ, அதிக நுட்பமாகவோ கூற முடியும் என்று ஒருவர் அபிப்பிராய பேதம் கொள்ள முடியுமே அன்றி, இவை வாழ்க்கையின் முரண்பாட்டைத் தீர்த்து வைப்பதையோ, பொருளற்றதாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/16&oldid=1121576" இலிருந்து மீள்விக்கப்பட்டது