பக்கம்:வாழ்க்கை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

17


அறிவின் களஞ்சியங்கள். இன்றைய சமுதாயம் அடைந்துள்ள நிலைக்கு இவையே காரணங்கள். இந்த விஷயங்களில் எதுவும் மேற்கூறிய மனிதர்களுக்குப் புலனாவதில்லை.

சாதாரண மக்கள் இந்த நூல்களின் கொள்கைகளைப் புரிந்துகொள்வது கடினம் என்றால், அது அவ்வளவு பெரிதன்று. ஆனால், படித்த வகுப்பினரே இவைகளை நுணுக்கமாய்ப் பயிலாமல் அலட்சியம் செய்து தள்ளுகின்றனர். இக் காலத்துத் தத்துவ ஞானிகள் கூட இந் நூல்களைக் கண்ணாலாவது பார்க்க வேண்டுமென்று கருதுவதில்லை. வாழ்க்கையில் முரண்பாடு இருப்பதையே காண முடியாதவர்களுக்கு இவைகளால் என்ன பயன்?

கண்களில் பார்வையுள்ளவர்கள் தம் முன்னால் காண்பவைகளை அறிந்து விளக்கிச் சொல்லுவார்கள். ஆனால் குருடனோ, கையிலுள்ள தன் கழியால் தட்டிப் பார்த்துக்கொண்டே நடக்கிறான் ; கழியில் தட்டுப் பட்ட பொருள்களைத் தவிர வேறு எதுவுமே இல்லை யென்று அவன் கூறுவான்!

போலி விஞ்ஞானிகள் கூற்று

‘வாழ்க்கை என்பது பிறப்பிலிருந்து மரணம் வரை ஒரு பிராணிக்கு ஏற்படும் நிகழ்ச்சிகள். ஒரு மனிதன், நாய், அல்லது குதிரை பிறப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு பிராணிக்கும் தனி உடலுண்டு. இந்த உடல் உயிரோடிருந்து, பிறகு மரிக்கின்றது. மரணம் என்பது உடல் பதனழித்து மற்றப் புழுப் பூச்சிகளுக்கு உணவாதலே. இவ்வாறு

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/24&oldid=1121994" இலிருந்து மீள்விக்கப்பட்டது