靈盤遵 விஞ்ஞானச் சிக்கல்கள்
நாடாள்வோன் அவையிலே நின்ற நாட்டின் அறிஞர்களெல்லாம் "நா" தடுமாறினர். "நாளை! நாளை! நாளையே முடிக்கிறேகம்” என்றனர்.
"நாளையா.” வியப்புடன் கேட்டான், வேந்தன் விழிமருள:
புருவம் மேலேறி, ஏறி இறங்குவதைக் கண்டனர் புவியாள்வோனிடம் - அறிஞர்கள்!
“ஆம் நாளையேதான்்”, என்ற நிலையில் தலையை மட்டுமே ஆட்டியாட்டிச் சோர்ந்தனர் அறிஞர்கள்! வேறென்ன கூற முடியும் வேந்து முன்னால்:
"மிக நன்று சென்று மீள்க’ ஆனால் ஒன்று, என்னை நீங்கள் ஏமாற்ற எண்ணினால், உருட்டுவேன் உங்களுடைய தலைகளை” என்றான் ஏறு போல் முழக்கமிட்டு!
'தலைகளைக் கொய்வேன்' என்று தரணியாள்வோன் கர்ஜித்ததைக் கேட்டக் கதிரவன், கவலை தோய்ந்த ஒளியோடு கருமேகங்களைக் கட கடவென உருட்டியபடியே வெளிறிய வானத்தை நீந்த முடியாமல், சோர்ந்து, தளர்ந்து, ஒய்ந்து அமிழ்ந்து விட்டான்!
ஆழ் துயிலில் ஆழ்ந்து கொண்டிருந்த அழகவிழா மலர் அரும்புகள், சோம்பலை அரை குறையாக முரித்துக் கொண்டு, புது மணத்தைப் பரப்பியவாறே இதழ் விரித்தலர்ந்தன.
இரலை, இரண்டாகக் கிழித்து ஒரு பாதியை ஆழித்துவிட்டு, மறுபதி ஏங்கே எங்கே என்று நெருப்புமிழும் கேர்ளத்தோடு தேடிவரும் பகலவன், கரகரவென அடிவான்த்தை விட்டோடி வந்தான்்.