密鲁
அரண்மனை முன்னாலே, அசை போட்டபடியே
ஒட்டகங்கள் நின்று கொண்டிருந்தன.
வரிசை வரிசையாக அணிவகுத்து நின்று கொண்டிருந்த அந்த ஒட்டகங்கள், மிக நீளமாகக் காணப்பட்டன:
முடிவு எங்கே முடிகின்றது என்று மன்னவன் ஊடுருவிப் பார்த்தான்்!
தொடுவானத்தைத் தொடுவதாக ஒட்டகங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டு அவன் பெருமூச்சு விட்டான்'
இரண்டிரண்டு பெரிய நீண்ட தோற்பைகள், ஒவ்வொரு ஒட்டகத்தின் மீதும் தொங்கிக் கொண்டிருந்தன.
அழகாகக் கட்டடம் கட்டப்பட்ட மிகப் பெரிய பப்பத்துப் புத்தகங்கள், அந்தத் தோற்பைகளினுள்ளே அடுக்கடுக்காக இருந்தன!
நாடாள்வோன் அதைப் பார்த்தான்்! “என்ன அது" என்றான்! பொறிபறக்கும் கோபத்தோடு.
"அதுதான்், இந்த மாபெரும் அவனியின் அற்புத சரித்திரங்கள் அரசே!” என்றனர் அமைச்சர்கள் ஒரே குரலில்!
நமது நாட்டிலே உள்ள நல்லறிஞர்களை எல்லாம் அழைத்தோம்!
அல்லும் பகலும் அயராது உழைத்து, இந்த அரிய வரலாற்றைத் தொகுத்துக் கொண்டு வந்துள்ளோம் மன்னவா” என்றார் அவர்கள்!