உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

பெரும்புகழுற்ற போலோ, பேட்மிண்ட்டன் போன்ற விளையாட்டுக்கள் பிறிதொரு வகை.

இவ்வாறு வகை வகையாக பெயர்கள் பெற்றிருக்கின்ற விளையாட்டுக்களைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது, பெயர்கள் எல்லாமே காரணப் பெயர்களாகவே அமைந்திருக்கின்றன என்பது அதிசயமே!

ஒரு காரணத்திற்காக, அதனால் விளையும் இனிய காரியத்திற்காக, அதனை நினைவு கூரும் பொருட்டு, ஒவ்வொரு விளையாட்டுக்கும் பெயராக அந்தப் பெயரே நின்று நிலைத்து விட்டிருக்கின்றது என்பனவற்றை அறிந்த போது, இது போன்ற விளையாட்டுக்களைத் தொகுத்து ஒரு நூல் எழுதவேண்டும் என்ற யோசனை எனக்குத் தோன்றியது.ஆசையும் தூண்டியது.

அந்தப் பேராவலின் முதிர்ச்சிக்கு வடிவம் கொடுத்தேன். வரலாற்றுக் குறிப்புக்கள் வளமான துணை தந்து உதவின. வழிகாட்டின.

விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் இவற்றை அறியும் போது, விளையாட்டுக்களின் பிறப்பையும் பெயர் பெற்ற சிறப்பையும் உணரும்பொழுது, உண்மையிலேயே மகிழ்ச்சியடைவார்கள் என்பது என் நம்பிக்கை.

உடலால் மட்டும் சிலநேரம் விளையாட்டுக்களில் கலந்து ஆடிவிட்டு, ஒதுங்கிப்போய் விடாமல், உள்ளத்தாலும் உணர்வாலும் விளையாட்டுக்களின் ஊடே நிதமும் உலவ வேண்டும் என்பது என் ஆவல்.

ஒவ்வொரு விளையாட்டும் எவ்வாறு பெயர் பெற்றது. என்ற பாங்கினை, ஆராய்ந்து எழுதியிருக்கிறேன். அவற்றை