10
விளையாட்டு விழா நடத்துவது எப்படி?
எவ்வளவு கடினம் என்று ஈடுபட்டவருக்கு நன்றாகத் தெரியும். இந்த இரண்டையும்விட கடினமானது இன்னொன்று இருக்கிறது. அதுதான் 'நாடகத்தை நடத்திப் பார்’ என்பது. ஒரு நாடகத்தை வெற்றி கரமாக நடத்திவிட்டால், இரண்டு கல்யாணம் பண்ணியதற்குச் சமம், 'நான்கு வீடு கட்டியதற்கு இணை’ என்பார்கள்.
இந்த மூன்றும் சேர்ந்தால்கூட கடினத்திற்கு ஈடாகாது. எதற்கு? விளையாட்டு விழா நடத்து வதற்குத்தான். ஆமாம்! விளையாட்டு விழா என்பது, நடத்த வேண்டும் என்று நினைத்தவுடனேயே நம்மையே விளையாடத் தொடங்கிவிடும். நடத்தி முடிப்பதற்குள் எத்தனை எத்தனை சிக்கல்களை விளைவித்துவிடும் என்பதை சொல்லித்தான் விளக்க வேண்டுமென்பதில்லை. ஈடுபட்டவர்களுக்கும் பாடு பட்டவர்களுக்குமே அதன் விவரம் புரியும்.
பார்ப்பதற்கு அழகாகத் தெரியும் நூல் கண்டு, கொஞ்சம் தவறி சிக்குண்டுவிட்டால் எப்படி இருக்கும்? கைதவறிப் போனால், கண்மூடித் திறப் பதற்குள் சிக்கிக் கொள்ளும். சிக்கெடுக்கப் போகின்ற வர்களும் சிக்கிக்கொள்வார்.திக்கித் தவிப்பார்.
இதே நிலைதான் விளையாட்டு விழாவிலும், காண்பதற்குக் கவர்ச்சியாகத் தோன்றுகின்ற விழா, குதித்துக் குதித்துக் கம்பீரமாக ஒடும் பந்தயக் குதிரை போலத்தான் தெரியும். குதிரைக்கு கிறுக்குப் பிடித்தால்? அதே போல்தான் விளையாட்டு விழா விலே குறுக்கு நெடுக்காக செயல்கள் நடந்தால்?