உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


```தடை தாண்டி ஓட்டம் (Hurdle)

இந்தப் போட்டி நிகழ்ச்சிகளுக்குக் குறைந்தது 40 தடைகள் (Hurdles) தேவை. ஒரே சமயத்தில் 6 பேர் போட்டிகளில் பங்கு பெற வேண்டுமானால், 60 தடைகள் தேவைப்படும்.

ஒரு தடையின் எடை 22 பவுண்டு 0.75 அவுன் சுக்குக் குறையாமலும், 3 அடி 11 அங்குல அகலமும் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வப்போது, நடக்க இருக்கின்ற நிகழ்ச்சிக்கேற்ப தடைகளின் உயரத்தை ஏற்றி இறக்கி வைத்துக் கொள்ளும் வசதி உள்ளது போல, தடையின் அமைப்பு இருப்பது சிறந்ததாகும்.

ஆண்களுக்கான போட்டிகளுக்குரிய தடையின் உயரம்.

110 மீட்டர் தடை தாண்டி ஒட்டம் என்றால் உரயம் 3'6”

200 மீட்டர் தடை தாண்டி ஒட்டம் என்றால் உயரம் 2'6”

400 மீட்டர் தடை தாண்டி ஒட்டம் என்றால் உயரம் 3 அடி.

பெண்களுக்கு 100 மீட்டர் தடைதாண்டி ஒட்டம் என்றால் 2'9” 200 மீட்டர் தடைதாண்டி ஒட்டம் என்றால் 2’6”