உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையும் பயிர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையும் பயிர்

நினைத்தது வீண்போகவில்லை. அப்பா ஜவாஹருக்கு ஒரு சின்னக் குதிரையையே வாங்கிக்கொடுத்தார். உண்மையான உயிருள்ள குதிரை. ஜவாஹருக்கு உண்டான ஆனந்தம் சொல்லி முடியாது. அதன்மேல் ஏறி ஓட்டக் கற்றுக்கொண்டார்.

ஊரெல்லாம் பிரமிக்கும்படி குதிரையை வெகு வேகமாக ஓட்டவேண்டுமென்று ஜவாஹர்லாலுக்கு ஆசை. அடிக்கடி அதை ஓட்டிக்கொண்டு சவாரி செய்து ஆனந்தப்படுவார். ஒரு நாள் அவருக்கு அதிக உற்சாகம் உண்டாகிவிட்டது. குதிரைமேல் ஏறிச் சவாரிசெய்ய ஆரம்பித்தார். அதை விரட்டி ஓட்டினார். குதிரை நாலுகால் பாய்ச்சலில் ஓடியது. ஓடுகிற வேகத்தில் ஜவாஹர்லால் தொபுகடீர் என்று கீழே விழுந்தார். நல்ல வேளை, காயம் ஒன்றும் இல்லை. ஓட்டம் பிடித்த குதிரை வீட்டுக்குப் போய் நின்றது.

வீட்டில் உள்ளவர்கள் குதிரையைப் பார்த்தார்கள். ஜவாஹர்லாலை அதன்மேல் காணவில்லை. அம்மா வந்து பார்த் தாள். அப்பா வந்து பார்த்தார். நான் அவரைத் தள்ளிவிட்டு வந்தேன்” என்று குதிரை சொல்லுமா?

குழந்தையைத் தேடிக்கொண்டு போனார்கள். கண்டு பிடித் தார்கள். காயம் ஒன்றும் இல்லாமல் தலையைக் குனிந்துகொண்டு நின்றிருந்தார் ஜவாஹர். கீழே விழுந்தும் காயம் படவில்லையே! நீ வீரன்தான்” என்று அப்பா கொண்டாடினர்.

அதுமுதல் குதிரைச் சவாரியை அவர் விட்டுவிட்டார் என்று தானே நீங்கள் எண்ணுகிறீர்கள்? இல்லவே இல்லை. அந்தக் குதிரையிடம் இன்னும் அதிகப் பிரியத்தோடு பழகினார். மேலும் மேலும் குதிரைச் சவாரி செய்தார். அறுபது வயசு கடக்கும் இப்போதுகூட நம்முடைய ஜவாஹர்லாலுக்குக் குதிரை ஏறிச் சவாரி பண்ணுவதென்ருல் பிரியம் அதிகம்.

ஜவாஹர்லால் மிகவும் குறும்புக்காரர். ஹோலி பண்டிகை என்று ஒரு பண்டிகையை வடதேசத்தில் கொண்டாடுவார்கள். அப்போது பீச்சாங்குழலில் வர்ணத் தண்ணீரை விட்டுச் சிநேகிதர் களின்மேல் பீச்சுவது வழக்கம். ஜவாஹர்லால் சிறு பையனாக இருந்தாலும் பெரியவர்களின்மேல் வர்ண ஜாலத்தைப் பீச்சுவார். அவர்களைத் துரத்தி அடித்து முகத்திலும் ஆடைகளிலும் ஒரே வர்ணமாக ஆக்கிவிடுவார். அலகாபாத்தில் அவர்கள் பெரிய

16