உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையும் பயிர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்த் தாத்தா

முதலில் அந்தக் கவிஞர் சாமிநாதையருக்கு நேரே பாடம் சொல்லவில்லை. அவரிடம் படித்து வந்த மாணாக்கர் ஒருவர் பாடம் சொன்னார். சாமிநாதையருக்கோ நேரே பிள்ளையவர்க ளிடம் பாடம் கேட்க வேண்டுமென்ற ஆசை. புதிதாக வந்த அவர் எப்படித் தம் ஆசையைத் தெரிவிப்பது? ஒரு வழியும் தெரிய வில்லை. மனசுக்குள்ளேயே அந்த ஆசையை வைத்துப் புழுங்கிக் கொண்டிருந்தார்.

மாயூரத்தில் மீனாட்சிசுந்தரம்.பிள்ளை தம்முடைய வீட்டின் பின்புறத்தில் ஒரு தோட்டத்தை அமைத்தார். பெரிய மரங்களை மண்ணோடு பறித்துக்கொண்டு வந்து வைக்கச் செய்தார். அழகான மலரையும் பசுமையான மரங்களையும் பார்ப்பதில் அவருக்கு விருப்பம் அதிகம். கவிஞர்களுக்கே இயற்கை அழகில் ஈடுபடும் இயல்பு இருக்கும்.

வைத்திருந்த மரங்களெல்லாம் தளிர்த்துப் பூத்துச் சோலையாக விளங்கவேண்டும் என்ற ஆசை மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு இருந்தது. மரங்களில் புதிய தளிர் வந்திருக்கிறதா என்று பார்ப் பார். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் வீட்டுக்குப் பின் புறம் சென்று மரங்களைக் கவனமாக ஆராய்வார். எங்காவது ஒரு மரத்தில் புதிய தளிர் தளிர்த்திருந்தால் அவர் மனசிலும் மகிழ்ச்சி தளிர் விடும். இப்படித் தினந்தோறும் அவர் பார்த்து வருவதைச் சாமிநாதையர் கவனித்தார். மறுநாள் சீக்கிரமே எழுந்தார். நேரே வீட்டின் பின்புறம் சென்று எந்த எந்த மரங்களில் புதிய தளிர்கள் தோன்றியிருக்கின்றன என்று பார்த்துத் தெரிந்து கொண்டு போனார். சிறிது நேரம் கழித்துக் கவிஞர் அங்கே வந்தார். தளிர்களைப் பார்க்கத் தொடங்கினர். பார்த்துக்கொண் டிருக்கையில் சாமிநாதையர் அங்கே வந்தார். தம்முடைய ஆசிரி யரை மிகவும் மரியாதையோடு அணுகினார். தாமும் தளிரைப் பார்ப்பது போலப் பார்த்து, “அதோ, அங்கே ஒரு தளிர்” என்றார், ஆசிரியர் ஆவலோடு, "எங்கே?' என்று சொல்லி அதைப் பார்த்தார். மறுபடியும், "இதோ இங்கே ஒன்று” என்றார், அதையும் ஆசிரியர் பார்த்து மகிழ்ந்தார்.

இந்தக் காரியத்தால், சாமிநாதையருக்கு ஆசிரியரோடு நேரில் பேசிப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது புதிய தளிர்களைக் காணக் காண மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மனசு மிகவும்

23.