உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையும் பயிர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையும் பயிர்


சாயங்காலம் பரீட்சைப் பாடத்தைப் படிக்க ஆரம்பிப்பார். ஏழு மணிக்கே தூக்கம் கண்ணைச் சுற்றும், ஏழரை மணிக்குத் தூங்கிவிடுகிறவர் அல்லவா? ஒன்பது மணி வரையில் படித்தே தீர்வது என்று உறுதி செய்துகொண்டார். ஒருநாள் படிக்க உட்கார்ந்தார். தூக்கம் வரும்போல இருந்தது. "சீ, சனியனே!" என்று சொல்லி, நின்றபடியே படித்தார். அப்போதும் தூக்கம் கண் இமைகளை இழுத்தது. நடந்துகொண்டே படித்தால் தூக்கம் வராது என்று நினைத்தார். மெதுவாக உலாத்தினபடியே படித்துக் கொண்டிருந்தார். தூக்கம் அவரை அணுகியது, கண் சுழன்றது. புத்தகம் நழுவிக் கீழே விழுந்தது. அதுகூட அவருக்குத் தெரிய வில்லை. அடுத்தபடி அவரே தடாலென்று கீழே விழுந்துவிட்டார். தலையில் காயம் பட்டுவிட்டது. அதுமுதல் எப்போது தூக்கம் வருகிறதோ அப்போது படிப்பதை நிறுத்திவிடுவார். நல்ல புத்திசாலி ஆகையால் கொஞ்ச நேரம் படித்தாலும் அது ஆழமாக அவர் மனத்தில் பதிந்தது. அவர் பரீட்சையில் தேறிவிட்டார்.

சின்னக் குழந்தையாக இருந்தபோது ராஜேன் பாபுவுக்கு வீட்டிலேயே ஒருவர் பாடம் சொல்லிக் கொடுத்தார். அவர் ஒரு மெளல்வி முஸ்லிம் வாத்தியார். "எனக்கு அது தெரியும்; இது தெரியும்" என்று அவர் சொல்லிக் கொள்வார். ராஜேன்பாபுவுடைய சிற்றப்பா அந்த மெளல்வி இப்படியெல்லாம் சொல்வதைப் பார்த்து அவரைக் கிண்டல் பண்ணுவார். ஒருநாள் சிற்றப்பா மெளல்வியை, "உங்களுக்குத் துப்பாக்கி சுடத் தெரியுமோ?” என்று கேட்டார். "துப்பாக்கியா பீரங்கி கூடச் சுடத் தெரியும்” என்றார் மெளல்வி. "சரி, இன்றைக்கு நாம் வேட்டையாடப் போகலாம் வாருங்கள்" என்று சிற்றப்பா அவரை வெளியில் அழைத்துச் சென்றார். ராஜேன் பாபுவும் அவர்களுடன் வேடிக்கை பார்க்கப் போனார். ஓரிடத்தில் ஒரு மரத்தில் ஒரு கழுகு உட்கார்ந்துகொண்டிருந்தது. சிற்றப்பா, “அதோ அந்தக் கழுகைக் குறிபார்த்துச் சுடுங்கள்" என்று சொல்லித் தம்முடைய துப்பாக்கியை மெளல்வியின் கையில் கொடுத்தார். மெளல்வி அதை வாங்கிக்கொண்டார். கனைத்தார். குறிபார்த்தார். துப்பாக்கியில் உள்ள குதிரையை அழுத்தினார்; அவ்வளவுதான், 'டுமீல்' என்ற துப்பாக்கி வெடியோடு தடாலென்ற ஓசை கேட்டது. கழுகு விழவில்லை. மெளல்வியே பின் பக்கமாக


32