இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
13
காட்சிப் படலம்
படைத்தலைமை ஏற்றுள்ளோர் தனித்தி றத்தால்
பயிற்சிமிகு போர்த்திறத்தால் வெற்றி தோல்வி
படைத்திடுதல் இருபுறத்தும் மாறி மாறிப்
பகலிரவு சுழல்வதுபோல் இங்கு மங்கும்
அடிக்கடிசென் றலமந்து திரியும் மீளும்;
ஆதலினால் ஒருநாட்டில் ஏற்றங் காணும்;
கிடைத்ததுவும் மறுநாளில் மாற்றங் காணும்;
கீழ்மேலாய் மேல்கீழாய்ச் சுழலும் நாடே.9
-------------------
அலமந்து - சுழன்று.