பக்கம்:வைணமும் தமிழும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

வைணவமும் தமிழும்



மெய்ப்பொருளியலைச் சார்ந்த இறைவனான நாராயணனைப் பற்றிய கருத்து, (3) வரலாறு சார்ந்த இறைவன் எனக் கருதப் பெறும் வாசுதேவனைப் பற்றிய கருத்து; மற்றும் (4) ஆயர் இனத்தைச் சார்ந்த இறைவனான கிருட்டிணனைப் பற்றிய கருத்து என்பனவாகும். இந்த நான்கு வகைக் கருத்துகளும் இணைந்ததே இன்றைய வைணவமாகத் திகழ்கின்ற ஒன்றாகும். இந்த நான்கு வகைக் கருத்துகளையும் ஆய்ந்து அவையே இன்றைய வைணவ மரபாக மாறின என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளேன்.[1] ஆங்குக் கண்டுகொள்க.

இனி, பண்டைய தமிழ்நூல்களில் திருமால் வழிபாடு பற்றிய குறிப்புகளைக் காண்போம்.

1. தொல்காப்பியம்

பண்டையத் தமிழர்கள் கடல் சூழ்ந்த நிலப் பகுதியை நான்கு நிலங்களாகப் பகுத்தும், அந் நிலங்கட்குத் தெய்வங்களை வகுத்தும் காட்டியுள்ளனர், காடு சார்ந்த நிலமாகிய முல்லையையும், அதன் ஆதி தெய்வமான திருமாலையும் முதற்கண் வைத்துச் சிறப்பித்துள்ளமை,

மாயோன் மேய
காடுறை உலகமும்

[2] என்ற பழந்தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்தால் அறியலாம். மாயோன் - கண்ணன், கருநிற முடையோன்! இதனால் மாயோன் என்று முன்னோர்களால் குறிப்பிடப்


  1. சுப்புரெட்டியார். ந:வைணவச் செல்வம் எனும் நூலில் முதல் இயலைக் காண்க (தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியிடு)
  2. தொல்-பொருள்.அகத்திணை-5 (இளம்)