பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகைத் துறந்த அணங்கு மற்றும், சேக்கிழார் மொழியில் நாகரிகப் பண் பும் நயந்து காணப்படுகிறது. புனிதவதியார் பூப்பு அடைந்தனர் என்பதைப் புலவர் புகலவேண்டும். பொதுவாகப் பூப்பிற்குப் பின் நடந்துகொள்ள வேண்டுவது இல்லிகவாமை. இதன. உட்கொண்டு முன்னேயதைக் கூருமல் பின்னேயதைக் கூற எண்ணி யவராய் ' இல்லிகவாப் பருவம் ' என்று இயம்பி இருப்பது நம் நாட்டு மாதர்களின் பண்பை விளக்குவ தோடு நாகரிக முறையும் எத்துணை விளங்க ஏது வாகிறது பாருங்கள் ! இவ்வாறு பாடப்பட்டிருப்பது சேக்கிழார் பாவின் பொருட் சிறப்புப் புலப்படக் காரணமாகிறது. தனதத்தனர் திருமகளார் பூப்புற்றுப் பொலிவ தைக் கேள்வியுற்ற நிதிபதி என்னும் பெயரிய வணிகர் தம் தனயனுக்கு மணமுடிக்க மனத்தகத்து எண்ணம் கொண்டார். அதனைப் பேசி முடிக்கப் பேரறிஞர் சிலருடன் நிதிபதி தம் கடல் நாகை நகர் நீங்கி, காரைக்கால் புறப்பட்டார். வந்த முதியோர்களும் தனதத்தருைம் மண மக்கள் குணம் பேசிக் குலம் பேசிக் குறித்த நாளில் கடிமணம் இயற்ற முடிவும் செய்தனர். மண விழவு, குறிப்பிட்ட மங்கள நல் ஒரைதனில், புனிதவதியார் தமக்கும் பரமதத்தன்தனக்கும் தெளி தரு நூல் விதி வழியே செய்து முடிக்கப்பட்டது. இம் மணவினே யைக் கண்டு கேளிரும் கிளைஞரும் கனி மிக மகிழ்ந் தனர். புனிதவதியார் மயில் போலும் பரமதத்தன் காளைபோலும் விளங்கினர். இந்த முறையில் இம் மணமக்கள் விளங்கித் திருமணம் முடிக்கப்பெற்றனர் ரேன்பதை, சேக்கிழார் பெருமானர்,