34
வ.வே.சு.ஐயர்
முடியாது. உயர்நீதிமன்றங்களில் வழக்குரைஞர் தொழில் நடத்த வேண்டுமானால் லண்டனுக்குச் சென்று பார்-அட்-லா பட்டம் பெற்று பாரிஸ்டராக வேண்டும் என்ற இந்த நிலை சுதந்திரத்துக்கு முன்பு வரையிலும் இருந்தது.
அதனால்தான், பெரும்பான்மையான இந்திய வழக்குரைஞர்கள் கீழ் நீதிமன்றங்களிலேயே வக்கீல் தொழிலை நடத்தவேண்டிய நிலை இருந்தது. இந்தியாவைப் போலவே பர்மாவும் அன்றைக்கு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழே இருந்தது. அங்கும் அதே நிலைமைதான். பார்-அட்-லா படித்தவர்களே உயர்நீதி மன்றங்களில் வழக்குரைஞர் தொழிலை நடத்தி வந்தார்கள். மற்றவர்கள் கீழ் நீதி மன்றங்களில் மட்டுமே தொழில் நடத்தி வந்தார்கள்.
இந்தப் பிரித்தாளும் பிரிட்டனின் சூழ்ச்சிக்கேற்ப, சுப்பிரமணியன் சுமார் ஆறு மாதங்கள் ரங்கூன் நகரிலே வழக்குரைஞர் தொழிலை நடத்தினார். பிறகு, லண்டனுக்குச் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற விரும்பி, தனது எண்ணத்தை அவர் மைத்துனரிடம் கூறினார்.
மைத்துனரும் சுப்பிரமணியம் ஆசையிலே நியாயம் இருப்பதை உணர்ந்தார். பாரிஸ்டரானால் தனது தங்கை குடும்பத்துக்கு நல்ல வருவாய் கிடைக்கும் என்பதால், சுப்பிரமணியத்தை லண்டனுக்கு அனுப்புவது என்ற முடிவுக்கு அவள் வந்தார்.
ரங்கூன் நகரிலே உண்டியல் கடை ஒன்றைப் பசுபதி நடத்திப் பெரும் பணக்காரனாக வாழ்பவர். அவர் நினைத்தால் பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்கான எல்லாப் பணவசதிகளையும் செய்யலாம்! மாதந்தோறும் ஆகும் செலவினங்களையும் அவர் வழங்கலாம்! ஆனால், அவ்வாறு செய்யாமல் லண்டனிலே ஓர் உண்டியல் தொழில் நடத்தும் கடையை வைத்துக் கொடுத்து, அதனால் வரும்