என்.வி. கலைமணி
39
செய்து சபதம் மேற்கொண்டார் அந்தச் சூளுரைக்கு ஏற்றபடி தனது சொந்த மாநிலத்திலே, அவரையொத்த வாலிபர்களைத் திரட்டி ‘நண்பர்கள் சங்கம்’ என்ற ஓர் அமைப்பைத் துவக்கினார்.
இந்தச் சங்கத்திலே உறுப்பினர்களானவர்களிடம், அவர் நாட்டுப் பற்றை உருவாக்கினார். அதற்காக எல்விதத் தியாகத்தையும் செய்யத் தயார் என்ற உறுதிப்பாட்டை அவர்களது நெஞ்சிலே ஊன்றினார். அமைதியான பாதையிலேயே சுதந்திரப் போரை நடத்துவோம். மக்கள் இடையே அவ்வகையில் விழிப்புணர்வுகளை வித்திடாவிட்டால், பலாத்கார முறைதான் வழி என்ற முடிவேற்பட்டால் அதையும் செய்யத் தயாராகி, இந்தியாவை விடுவிப்போம்' என்று. அவர் அச்சங்க உறுப்பினர்களிடையே சுதந்திர ஆண்மையை வளர்த்தார்! இதுதான் நண்பர்கள் ரகசியச் சங்கத்தின் இலட்சியம் என்பதை உருவாக்கியவர் மாவீரர் சாவர்கர்.
சாவர்கர் ஈடு இணையற்ற நாவன்மை படைத்த பேச்சாளர் அவர் ஆற்றும் வீர உரை எரிமலையைப் போன்ற ஓர் ஆவேசத்தை மக்களிடையே ஊட்டவல்லது. அதனால் அவர், யாரையும் எவரையும் எளிதில் தன் பக்கம் இழுக்கும் வல்லமை பெற்றிருந்தார். இளைஞர்களும், தேசபக்த ஆர்வலர்களும், பொதுமக்களும் அவரது வீர உரைகேட்டு அதற்கேற்ப நடக்கும் ஒரு மயக்க உணர்வையும் பெற்றிருந்தார்கள்.
மெட்ரிக்குலேஷன் கல்வியிலே வெற்றிபெற்ற சாவர்கர் பூனாவிலே உள்ள பெர்கியூஷன் கல்லூரியிலே சேர்ந்து படித்தார். அங்கேயும் கல்லூரி மாணவர்களைத் திரட்டி நாட்டுப்பற்றை உணர்ச்சியோடு அவர்கள் நெஞ்சிலே பதித்தார். அத்துடன் சாவர்கரது நாவன்மை மிக்க பேச்சும் மாணவர்களை அவர் பக்கம் இழுக்கப் பயன்பட்டது.
சாவர்கர் சிறந்த நாவலர் என்பதால், ஆங்கில ஏகாதிபத்தியம் இந்திய மக்களுக்குச் செய்து வரும் நிர்வாகக் கொடுமைகளை