பக்கம்:Humorous Essays.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹாஸ்ய வியாசங்கள்

15

வேண்டும்” என்று இடையன் வற்புறுத்த, பிராமணன் “இதென்னடா! கஷ்டமாய் முடிந்தது! என்னையா சாப்பிட சொல்லுகிறாய் இந்த ஆட்டுக் குட்டியை! நான் பிராம்மணனடா! இதைத் தீண்ட மாட்டேனப்பா!” என்று உரக்கக் கூவினான். இவ்வாறு ஒருவன் சொல்லுவது மற்றொருவனுக்கு அர்த்தமாகாது, இருவரும் பெருங் கூச்சலுடன் சச்சரவிட்டுக் கொண்டு அதிர்வெடியூருக்குத் திரும்பி வர, அச்சமயம் அவ்வூர் வைத்தியன் ஒருவன் (அவனும் செவிடு என்று நான் சொல்ல வேண்டியதில்லை) எதிரில் வர, அவனிடம் போய் இருவரும் முறையிட்டார்கள். இடையன், “ஐயா! நீங்கள்தான் மத்யஸ்தமாகச் சொல்லுங்கள்; இவர் என் மந்தையைப் பார்த்து கொண்டிருந்ததெல்லாம் ஒரு நாழிகை கூட இராது. அதற்காக இந்த ஆட்டுக்குட்டியைக் கொடுத்தால் வேண்டாமென்கிறார். இதற்கென்னவோ கொஞ்சம் கால் ஒடிந்துதானிருக்கிறது. இவர் செய்த உபகாரத்திற்கு இது போதாதோ?” என்றான். பிராம்மணன், “ஐயா வைத்தியரே! நீங்கள்தான் மத்தியஸ்தம் சொல்லுங்கள். இந்த ஆட்டுக் குட்டியின் காலை நான் ஒடிக்கவேயில்லை. நான் பிராம்மணன். ஜீவஹிம்சையே செய்ய மாட்டேன். என் மீது தப்பாக இவன் பிராது செய்கிறான். அன்றியும், இதன் காலை நீங்கள் ஒடித்தபடியால், நீங்கள்தான் இதைச் சாப்பிட வேண்டுமென்கிறான்! இதென்ன பிராப்தமாயிருக்கிறது! நான் பிராம்மணன். ஆட்டு மாம்சத்தைத் தின்பதாவது. பாபம்! பாபம்!” என்றான். மத்யஸ்தராகக் கோரப்பட்ட செவிட்டு வைத்தியர், “பாபம் புண்ணியம் எல்லாம் பார்த்தால் எனக்கு முடியுமா? இந்த ஆட்டுக் குட்டிக்கு வைத்தியம் செய்ய எனக்குத் தெரியாதையா!” என்றார். தன்னை அந்த ஆட்டுக் குட்டியின் காலுக்கு சிகிச்சை செய்ய வேண்டுமெனக் கேட்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டார். கொஞ்ச நேரம் இம்மூவர்களும் தாங்கள் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்து, தங்கள் வியவகாரம் தீராதபடியால், அவ்வூர் தலையாரி வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தனர். அவனிடம் இம்மூவரும் தங்கள் தங்கள் கருத்தின்படி முறையிட்டனர். அத்தலையாரி பத்து நிமிஷம் வரையில் இவர்கள் கூக்குரலை யெல்லாம் கேட்டு விட்டு “ஐயா, நீங்கள் மூவரும் எவ்வளவு சொன்னாலும் சரி, அந்தக் கழுதையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/21&oldid=1352396" இலிருந்து மீள்விக்கப்பட்டது