பக்கம்:Humorous Essays.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹாஸ்ய வியாசங்கள்

17



ஆஸ்பத்திரி விசாரணை

வடஆற்காடு ஜில்லாவில் ஒரு ஆஸ்பத்திரியிருந்தது. அந்த ஆஸ்பத்திரியின் முக்கிய வயித்திய உத்யோகஸ்தர் கொஞ்சம் சோம்பேறி. ஆஸ்பத்திரியை ஒழுங்காய் சுத்தமாய் வைத்துக் கொண்டிருப்பதில் அதிகமான காலத்தைச் செலவழிப்பதில்லை. ஆயினும் வருஷா வருஷம் சென்னையிலிருந்து பிரபல வயித்தியர் ஒருவர் மேற்பார்வை பார்க்க வரும் போது மாத்திரம் விழித்துக் கொண்டு, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வார். மேற்கண்டபடி மேற்பார்வை பார்க்கச் சென்னையிலிருந்து ஒரு வயித்திய உத்யோகஸ்தர் ஒரு முறை விஜயம் செய்தார். அவர் நாளைக்கு வரப் போகிறார் என்று தெரிந்தவுடன், இன்றைக்கே ஆஸ்பத்திரியையெல்லாம் சுத்தி செய்து ஒழுங்காக வைத்து வைத்தார்.

மறுநாள் பதினொரு மணிக்கு சென்னை வயித்தியர் வருமுன் ஒரு மணிக்கு முன்பாக தன் ஆஸ்பத்திரியில் எல்லாம் ஒழுங்காகவும், சுத்தமாகவும் இருக்கிறதா என்று மேற்பார்வை பார்த்துக் கொண்டு வந்தார். அச்சமயம் ஆஸ்பத்திரி நர்சுகள், வேலைக்காரர்கள் முதலியோரெல்லாம் சுத்தமான ஆடை உடுத்திக் கொண்டிருக்கிறார்களா என்று பரிசோதித்துப் பார்த்த பொழுது, கொஞ்சம் வயது சென்ற ஆஸ்பத்திரி மகம்மதிய கேட் ஜவான் மாத்திரம் மிகுந்த பழமையான மிகவும் அழுக்குப் படிந்த கருப்பு தலை குட்டை ஒன்றைக் கட்டிக் கொண்டிருப்பதைக் கண்டனர். உடனே கோபங்கொண்டவராய், அவனைக் கடிந்து “தத்க்ஷணம் அந்த பழய அழுக்கான தலை குட்டையை எடுத்து விட்டு வேறு தலை குட்டை கட்டிக் கொண்டு வந்தாலாச்சு, இல்லா விட்டால், உன்னை உடனே வேலையினின்றும் நீக்கி விடுவேன்” என்று பயமுறுத்தினார். ஜவான் என்ன செய்வான் பாபம்! அத்தலை குட்டை அவனுக்குக் கலியாண காலத்தில் இருபத்தெட்டு வருஷங்களுக்கு முன் மாமியார் வீட்டார் கொடுத்தது. அது முதல் அதை விடாது சலவைக்கும் போடாமல் கட்டிக் கொண்டிருந்தான். அதில் எவ்வளவு துர்க்கந்தமும் அழுக்கும் இருந்ததென நான் சொல்ல வேண்டியதில்லை; இருந்த போதிலும் அந்த பழய தலைகுட்டையை விட

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/23&oldid=1352407" இலிருந்து மீள்விக்கப்பட்டது