பக்கம்:Humorous Essays.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

ஹாஸ்ய வியாசங்கள்

படி, தன் வீடு முழுதும் சாற்றி விட்டு வேறு வீட்டில் குடியிருந்து வந்தார். மூன்று மாதங்கள் கழிந்தவுடன், ஜோஸ்யர்களைக் கேட்டு ஒரு நல்ல நாளாக நியமித்துக் கொண்டு அன்றைத் தினம் தன் சம்சாரத்துடன் தன் பழய வீட்டிற்கு மறுபடியும் குடி புக வேண்டுமென்று தீர்மானித்தார். சகுனங்களெல்லாம் நன்றாய் இருக்க வேண்டுமென்று ஏற்பாடு செய்து, தன் வேலைக்காரியாகிய லட்சுமி என்பவளை அழைத்து “எங்கள் பழய வீட்டு சாவியை உன்னிடம் கொடுக்கிறேன்; நாங்கள் காலை 9-மணிக்கு அங்கு வருவோம், அதற்கு முன்பாக நீ போய் அதைத் திறந்து, உள்ளே உட்கார்ந்து கொண்டிரு; நாங்கள் 9-மணிக்கு வந்து வெளியில் கதவைத் தட்டுகிறோம், அப்பொழுது உள்ளிருந்து உன் குரலைக் கொடு; அப்பொழுது நீ யார் என்று நான் கேட்கிறேன்; நான்தான் ‘லட்சுமி’ என்று நீ பதில் சொல்லிக், கதவை திறந்து எங்களை வரவழை” என்று சொல்லிக் கொடுத்தார்.

லட்சுமியும் அவர் சொன்னபடியே ஒரு மணிக்கு முன்பாக அப் பழய வீட்டிற்குப் போய் கதவைத் திறந்து வீட்டையெல்லாம் பெருக்கி, சுத்தம் செய்து விட்டு, தெருக் கதவைச் சாத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அச்சமயம் அவள் இங்கிருப்பதை யறிந்து அவளது தமக்கை (தன் புருஷனை சிறு வயதிலேயேயிழந்த அமங்கிலி) அந்த வீட்டிற்குப் போய்க் கதவைத் தட்ட, லட்சுமி தன் தமக்கையின் குரலைக் கேட்டு, கதவைத் திறந்து கொண்டு வந்து என்ன விசேடம் என்று வினவ, “உன் பெண் குழந்தைக்கு தேள் கொட்டி விட்டது, அம்மா, அம்மாவென்று துடித்து அழுகிறாள். உனக்கு தேள் கடிக்கு ஏதோ மந்திரம் தெரியுமாமே, உடனே போய் குழந்தையை கவனி” என்றாள். அதன் பேரில் லட்சுமி, தான் போய் சீக்கிரம் திரும்பி வந்து விடலாமென்று எண்ணினவளாய், “நான் போய் பார்த்து விட்டு வருகிறேன், அது வரையில் நீ இந்த வீட்டிற்குள் கதவைச் சாத்திக் கொண்டு இரு” என்று சொல்லி விட்டு, தன் தமக்கையை அங்கிருக்கச் செய்து தான் வேகமாகத் தேள் கொட்டின தன் சிறு குழந்தையைக் கவனிக்கப் போனாள். அவள் வீடு கொஞ்சம் தூரம் அவள் போய் குழந்தையை மந்திரித்து விட்டு சமாதானம் செய்து விட்டுத் திரும்புமுன், நம் கதிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/34&oldid=1352457" இலிருந்து மீள்விக்கப்பட்டது