பக்கம்:Humorous Essays.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

ஹாஸ்ய வியாசங்கள்

வருடம் படித்தார்-காலேஜ் வகுப்புகளில் நான்கு வருஷம் கழித்தார்-என்று இப்படியே பின்னால் கணக்கிட்டுக் கொண்டு போய், இவர் பிறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே வித்தியாரம்பம் பண்ணியிருக்க வேண்டுமென்று கண்டார். இந்த அதிசயத்தை கவர்ன்மென்டாருக்கு வெளியிட்டால் தனது நண்பனுக்கு கெடுதி ஏற்படுமென்று அவர் வெளியிடவில்லை!

தங்கள் வயதைக் குறைத்துக் கூற வேண்டிய கஷ்டம் சில சமயங்களில் நடு வயதில் தங்கள். தாரத்தை இழக்கும் ஆடவர்களைப் பீடிக்கிறது-அவர்கள் இரண்டாவது கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்று விரும்பினால் தங்கள் வயதை மிகவும் குறைத்துச் சொல்ல வேண்டியவர்களா யிருக்கிறார்கள். என்னுடைய நண்பர் ஒருவர் ஒரு கோமுட்டிச் செட்டியார் இருக்கிறார். அவருக்கு வயது 48. போன வருடம் அவர் தாரம் தெய்வீகத்தால் இறந்து போய் விட்டது; இப்பொழுது அவர் இரண்டாம் விவாஹம் செய்து கொள்ளப் பிரயத்னப் படுகிறார். இந்த யோசனை அவருக்கு உதித்த நாள் முதல் அவரது வயது 38 ஆகி விட்டது திடீரென்று! யார் கேட்டாலும்-முக்கியமாக அவருடைய பந்துக்கள் கேட்ட பொழுதெல்லாம்-தனக்கு 38 வயது என்று சொல்லிக் கொள்ளுகிறார் ஆனால் இதற்காக செட்டியாருக்குக் கொஞ்சம் மாத செலவு அதிகமாச்சுது. இதற்கு முன் கொஞ்சம் வெண்மையாய் நறைத்துப்போன அவரது ரோமங்களை மறுபடியும் கறுப்பாக்கிக் கொள்ள மாதம் மாதம் கேஸ்ரஞ்சன் தைலங்களை வாங்க வேண்டியவராயினார்!

வயதைக் குறைத்துக் கூறும் குணம் நம்முடைய தேசத்தார்களுக்கு மாத்திரம் என்று எண்ண வேண்டாம், ஐரோப்பியர்களுக்குமுண்டு, முக்கியமாக அவர்களுடைய ஸ்திரீகளிடத்தில். பெரும்பாலும் ஐரோப்பிய ஸ்திரீகளை அவர்கள் வயது என்னவென்று கேட்பதே மரியாதையல்ல வென்று எண்ணப்படுகிறது. அவர்கள் பிரமாணத்தின் மீது சாட்சியாய்க் கூறும் பொழுதும், அவர்களுடைய வயதைப் பற்றி குறைத்துச் சொன்னால் அதற்காகப் பொய் சாட்சி கூறுகிறார்கள் என்று கண்டிக்கப்படமாட்டார்கள். ஐரோப்பிய ஸ்திரீகளுக்குள் விதவா விவாஹம் சாதாரணமாயிருப்பது போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/40&oldid=1352511" இலிருந்து மீள்விக்கப்பட்டது