பக்கம்:Mixture.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் துக்கொண்டு போக, அப்படகை அப்படியே விழுங்கிவிட்டதாம். கடைசியாக மற்ருெரு அதிசயத்தைக் கூறுகிறேன். அதன் வயிற் றைக் கிழித்துப் பார்த்தபொழுது அதன் வயிற்றின் ஒரு புறம் அபிரேய (Hebrew) பாஷையில் ஜோன” (Jonah) என்று எழுதியிருந்தது. இது என்ன என்று அவர்களெல்லாம் ஆச்சரியப் பட்டனர். நான் உடனே என் சிறு வயதில் பைபில் முழுவதும் படித்திருத்தபடியால், இத்திமிங்கலம்தான் முன்னுளில் ஜோன (Jonah) என்பவரை விழுங்கி இருக்க வேண்டும் (பையிலில் கூறிய படி): அந்த ஜோன இதன் வயிற்றில் என்னே போல் இருந்த பொழுது, அங்கிருத்ததற்கு அடையாளமாகத் தன் பெயரை அதன் வயிற்றில் ஒரு புறம் எழுதியிருக்கவேண்டும், என்று தெரி வித்தேன். இக்கதையில் யாருக்காவது சந்தேகமிருந்தால் பையிலில் கூறிய ஜோன என்பவரைக் கேட்டு சந்தேகம் கிவர்க்கித்துக் கொள்ளலாம், ஒன்பதாவது கதை, சீரங்கக் கோட்டையை நான் பிடித்த கதை - عسكنم .. . - 1799 ஆம் வருஷம் சீாங்க பட்டணம் சமது ராஜாங்கத்தாரால் பிடிக்கப்பட்டது என்று மாத்திாம் நமது தேசசரித்திரங்கள் கூறு கின்றன. அது எப்படி உண்மையாகப் பிடிக்கப்பட்டது என்கிற ரகசியம் இதுவரையில் யாருக்கும் தெரியாது. அதை உங்களுக்கு இன்று தெரிவிக்கிறேன். . எப்படியும் ஒரு நாள் இங்கிலீஷ்காரர்களுக்கும் தனக்கும் கடும்போர் விளையும், எப்படியும் அச்சமயம் நமது ராஜதானியை அவர்கள் முற்றுகை போடுவார்கள் என்று யோசித்தவனுய், டிப்பு சுல்தான் சீரங்கப்பட்டணம் கோட்டையை மிக பலப்படுத்தி யிருந்தார். அதற்காக ஆயிரக்கணக்கான பேர்களைக் கொல்லக்கக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/33&oldid=727326" இலிருந்து மீள்விக்கப்பட்டது