பக்கம்:Mixture.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயர்ணங்கள் 29 சின்ன பீரங்கிக் குழாய்களில் பெரிய குண்டுகள் புகாதபடியால், முட்டிக் கொண்டிருந்தனர்! இதற்குள்ளாக இங்கிலீஷ் சைனியமா னது கோட்டையைப் பிடித்துவிட்டது! இதுதான் சீரங்கப்பட்டணக் கோட்டை பகலில் பிடிக்கப் பட்ட ரகசியம். இதனுண்மையை நீங்கள் யாராவது அறிய வேண்டு மென்றிருந்தால், இப்பவும் சீரங்கப்பட்டணத்து இடிந்த கோட் டைக்குப் போய் சில இடங்களில் தோண்டிப் பார்ப்பீர்களாயின் சில பெரிய குண்டுகளும், சில சிறிய குண்டுகளும் கிடைக்கும். இதைவிட இக்கதை உண்மை யென்பதற்கு உங்களுக்கு என்ன அத்தாட்சி வேண்டும் அன்றியும், இன்றைக்கும் அந்த சுல்தான் சிப்பாய்களை நீங்கள் கேட்பீர்களாயின் நம்பொ என்ன செய்ரான் சாமி! பெரிய பீரங்கிக்கு சின்ன குண்டு கொடுத்தாங்க, சின்ன பீரங்கிக்கி பெரிய குண்டு கொடுத்தாங்க சாமி ’ என்று சொல்லு வார்கள். --Q-రు:Q-ర-ఆ பத்தாவது கதை நான் அமெரிக்காவுக்குப் போன கதை ~f~ ஒரு முறை அமெரிக்கா தேசத்திலுள்ள யுனேடெட்ஸ்டேட்ஸ் (United States) என்கிற நாட்டின் பிரசிடென்ட் அவர்கள் என்னு டைய ஆச்சரியகரமான செய்திகளைக் கேள்விப்பட்டு, தன் தேசத் திலுள்ள ஆச்சரியங்களை நான் பார்த்தறிய வேண்டுமென்று என்னை வரவழைத்தார்; அங்கு நான் கண்ட சில அற்புதங்களை இங்கு எனது நண்பர்களுக்குக் கூறுகிறேன். நான் அங்கு போயிருந்த சமயம் மழை யில்லாமல் அத்தேசம் மிகவும் கஷ்ட ஸ்திதியிலிருந்து. ஜனங்களுக்கோ குடிக்கத் தண் னிர் கிடைப்பது கஷ்டமாயிருந்தது; ஆடுமாடுகள் கதியைக் குறித் துக் கேட்க வேண்டியதில்லை. இச்சந்தர்ப்பத்தில் அத்தேசத்து frir ணுவக் குதிாை விார்கள் தங்கள் குதிரைகளுக்கு பச்சைப் புல் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார்கள். அவர்களுக்கு நான் ஒரு யுக்தி கற்பித்தேன். அத்தேசத்தில் ஏராளமாயிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/36&oldid=727329" இலிருந்து மீள்விக்கப்பட்டது