பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 நாடகமேடை நினைவுகள் இரண்டாம் அத்யாயம் سیاستهای سیاسی. எனது ஆயுளில் 1891-u ஜூலை மாசம் முதல் தே; முக்கியமான தினமாம். அதற்குக் காரணம், ! நாடகங்கள் எழுதுவதற்கும் நடிப்பதற்கும் இன் முக்கிய காரணமாயிருந்த சுகுணவிலாச சபை ப் தேதியில் சென்னேயில் ஸ்தாபிக்கப் பட்டதேயாம். “சுகுணவிலாச சபை' ஸ்தாபிக்கப்பட்ட விர்த்தாந்தத்தை சற்று. விவசமாக எழுத விரும்புகிறேன். மேற்கண்ட தேதியில் டிை சபையை ஸ்தாபித்தவர் எழுவர். அவர்கள் ரீமான்கள் ஊ. முத்துகுமாரசாமி செட்டி யார், வி. வெங்கடகிருஷ்ண நாயுடு, அ. வெங்கடகிருஷ்ன பிள்ளை, த ஜெயராம் நாயகர், ஜி. இ. சம்பத்து செட்டியார், சுப்பிரமணியப் பிள்ளே, நான். மேற்கண்டவர்களில் முதல் மூவர்கள் காலகதியடைந்து விட்ட னர். சம்பத்து செட்டியாரும், சுப்பிரமணியப் பிள்ளையும் சபை பைவிட்டு இடையில் நீங்கி விட்டனர். ஜெயராம் நாயகரும் நானும் சற்றேறக்குறைய 40 வருடங்களாக அச்சபைக்கு உழை த்து வருகிருேம், சென்னேயில் : சுகுணவிலாச சபை ஸ்தாபிக்கப்பட்ட தற்கு ஆதி காரணம் பல்லாரி கிருஷ்ணமாசாக்லு என்பவர் இவ் விடம் பல்லாரியிலிருந்து வந்து விக்டோரியா ஹாலில் தெலுங்கு பாஷையில் நான்கு ஐந்து நாடகங்கள் கடத்தினதேயாம் என் l-jġi; எல்லோரும் அறிந்த விஷயமே. காலஞ்சென்ற கிருஷ்ண மாசார்லு அவர்கள், அக்காலத்தில் ஏற்படுத்திய ' சாச வினுேக சபையார் ' தெலுங்கில் அச்சமயம் ஆடிய நாடகங்களைப் பற்றி முன்பே தெரிவித்திருக்கிறேன். அங்காடகங்களைக் கண்ணுற்ற சிறுவர்கள் மனதில் அப்படிப்பட்ட நாடக சபை ஒன்று சென்னேயில் ஸ்தாபிக்க வேண்டு மென்று யோசனை பிறந்தது சகஜமே. அப்படிபட்ட எண்ணங்கொண்ட வர்களுள் மேற்கண்ட எழுவரும் ஒரு பிரிவினராவர். அவர் களுள் வெங்கடகிருஷ்ண ந யுடு என்பவர் ஒருதினம் நான் அப் பொழுது வசித்துவந்த ஆச்சாரப்பன் வீதி 54 செம்பருடைய வீட்டிற்கு வந்தார். அச்சமயம் சரசவினுேத சபையாருடைய கடைசி நாடகமாகிய சிரகாரி எலும் நாடகத்தைக் கண்ணுற்று அப்படிப்பட்ட காடக சபை யொன்றை ஏற்படுத்தி அதில் நடிக்கவேண்டுமென்று பெருங் கவலே கொண்டி ருந்த நான், அந்த எண்ணத்தை ஈடேற்றுவதற்கு முதல் பிரயத்னமாக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/13&oldid=727417" இலிருந்து மீள்விக்கப்பட்டது