பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நாடகமேடை நினைவுகள் யாய் கம்பி இதை இங்கு எழுதலானேன். எந்தக் காரீயத்தை மேற்கொண்டாலும் அதில் அதிகப் பலனை அடைவோம், பெரும் ஜெயத்தைப் பெறுவோம் என்று கருதாது, 'சிறுகக்கட்டி பெருகவாழ்” என்னும் பழமொழியினே ப் பற்றுக்கோடாகக் கொண்டு, சிறிது பலன் கிடைத்த போதிலும் சத்துவிடிடியடைந்து, எடுத்துக் கொண்ட முயற்சியை மாத்திரம் கைவிடாமல் அதை கிறைவேற்ற கஷ்டப்பட வேண்டியது மாக்கர்கடன், பலனை அளிப்பது பானது அருள், என்று நம்பினவராய் நடந்து வந்தால் எவர்களுக்கும் இன்பம் அதிகமாகவும், துக்கம் குறை வாகவும் கிடைக்குமென்பது என் ஆயுட்காலத்தில் நான் அறிந்த ஒர் உண்மையாம். இதனுல் நான் அடைந்த பலனை, இதனே வாசிக்கும் எனது நண்பர்களும் பெறுவார்களென்று இதை இங்கு எழுதலானேன். சபை ஸ்தாபித்த ஒரு மாதம் ஆன பிறகு, என்ன நாடகத் தை நாங்கள் நடத்துவது என்கிற முக்கியமான கேள்வி பிறங் தது. அக்காலத்தில் அச்சிடப் பட்டிருந்த தமிழ்நாடகங்கள் மிகச்சில, அவைகளை க்கைவிரலில் நாம் எண்ணிவிடலாம். அவுை கள் ஏறக்குறைய எல்லாம் புராண இதிக சக்கதைகளாயிருக் தன. அவை அரிச்சக்தி நாடகப, மார்க்கண்டேயர் காடகம், இாணியவிலாசம், சிறுத்தொண்டர் நாடகம், முதலியவைகளாம். இவைகளெல்லாம் எங்களுக்குப் பிடிக்கவில்லை. அன்றியும் கிர்வாக சபையார் இவ்விஷயத்தைப் பற்றி ஆலோசித்தபொ ழுது, மற்றவர்கள் ஆடும் நாடகங்கள் நாம ஆடச் கூடாது, புதி தான தமிழ் நாடகங்களே காம் ஆடவேண்டுமென்று தான் வற்புறுத்தினேன். தான் இதன் சார்பாக எடுத்துக் கூறிய நியாயங்களை எனது நண்பர்கள் ஒப்புக்கொண்டனர். அதன் மீது சபையின் காரியதரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டி யார் தனக்குத் தெரிந்த தமிழ் வித்வான்களுக்குக்கடிதம் எழுதி அவர்களைக்கொண்டு ஏதாவது நாதன தமிழ் நாடகம் எழுதிக் கொடுக்க முடியுமா என்று விசாரிப்பதாகச் சொன்னும். என் னே யும் அப்படியே விசாரிக்கும்படிச் சொன்னர்கள். அதன் பேரில், அதுவரையில் அச்சிடப்பட்டிருந்த சில தமிழ் நாடகங் களைப்படித்து அவற்றின் மீது வெறுப்புக் கொண்டிருந்த கான், என்னுடன் ராசாங்க கலாசாலையில் படித்துக் கொண்டிருந்த எனது பால்ய நண்பராகிய ராமசாயகிம்கார் என்பவருடன் இசைப்பற்றிக் கலந்து பேசினேன்; இவர்தான் பிற்கால 'பான கல் ராஜா” என்கிற பட்டம் பெற்ற பெரியோர். பல்லாரி சா ச் ைேத சபையாருடைய ‘'சிரகாரி” என்னும் நாடகத்தை நான் பார்த்ததுபோல் இவரும் பார்த்தவர். தெலுங்கு பாஷையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/19&oldid=727427" இலிருந்து மீள்விக்கப்பட்டது