பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 நாடகமேடை நினைவுகள் அக்காலத்தில் எனது தாய் தந்தையர் அனுமதியின்றி நான் ஒன்றும் செய்வது வழக்க மில்லை. நான் சுகுணவிலாச சபையைச் சேர்ந்த பொழுது அவர்களுக்குத் தெரிவித்தே சேர்த்தேன். என் ககப்பனுர் 'உனது படிப்பானது இதனுல் கெடாதென்று எனக்கு நன்முய்த் தெரியும், ஆகவே சோலாம்’ என்று கூறிவிடையளித்தனர்; என் தாயார் மாத்திரம் சற்றே வெறுப்புடையவர்சளாய் வேஷமா நீ போட்டுக் கொள்கிறது!” என்ற கூறினர்கள். அவர்கள் தெருக் கூத்துகளைத் தவிர வேறு நாடகங்களைப் பார்த்தவர்களல்ல. ஆகவே அம்மாதிரி யிருக்கக் கூடாதென்று கூறினர் போலும். ஒருகால் அவர்கள் ஜீவக்க ாாயிருந்து நான் நாடக மேடையில் வேஷம் தரித்து ஆடுவதை ஆட்சேபனை செய்திருக்கால், என் வாழ்க்கையானது எக்க விதத்தில், எப்படி, மாறியிருக்கும் நான் தமிழ் நாடகங்களை எழுதுவதை விட்டு வேறேதாவது செய்திருப்பேனு ? இக்கேள் விகளுக்கெல்லாம் பகில்யாால் கூறமுடியும் என்னுல் கூறமுடி யாது; என்னேப் படைத்த பாமனுக்குத் தான் தெரியும் ! துக்க சாகரத்தில், இனி ஏது பிழைப்பது என்று அமிழ்ந் திருந்த என்னேக் கைகொடுத்துக் கரையேற்றிய கடவுளின் கருணையானது, அத்துக்கத்தைக்கொஞ்சம் கொஞ்சமாக மறக் கவும் வழிகற்பித்தது; அதாவது என் மனதை ஏதாவது படிக் கும் வேலையிலோ, எழுதும் வேலையிலோ, செலுத்தும்படி உந்தி யது. இப்பொழுதும், ஏதாவது பெருக் துயரங்கள் எனக்குச் சம்பவிக்கும் பொழுது, இம் மார்க்கத்தையே பற்றுக் கோடா கக்கொண்டு உயிர்வாழ்ந்து வருகிறேன். இதன்படி அச்சமயம், முன்னமே ஆரம்பித்து, என் பரீட்சையின் பொருட்டு எழுது வது தடைபட்டிருந்த சகுந்தலே நாடக மொழிபெயர்ப்பை, மறுபடியும் தொடங்கினேன். அன்றியும் ஷேக்ஸ்பியர் மஹா கவியின் நாடகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். மேற்சொன்ன பெரும் துயரம் இக்காரணங்களினல் கொஞ் சம் குறைய, மறுபடியும் சபைக்குப் போக ஆரம்பித்தேன். சபையின் காரியதரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியார் என்பவர், சபையின் கூட்டங்களுக்கு வந்து போய்க் கொண்டி ருந்தால் உனக்குக் கொஞ்சம் ஆறுதலா யிருக்குமே என்று சொல்லி பலுப்பினர். அவருடைய வேண்டுகோளுக் கிணங்கி ஒரு ஞாயிற்றுக் கிழமை சபையின் கூட்டத்திற்குப் போனேன். அங்கு நான் அன்றைத்தினம் தண்டது என் மனதிற்கு மிகுந்த ஆச்சரியத்தையும் கொஞ்சம் வெறுப்பையும் விளைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/21&oldid=727429" இலிருந்து மீள்விக்கப்பட்டது