பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

忍0 நாடகமேடை நினவுகள் ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு பாடும் பொழுது தாளங்கள் கட்டு வதை அறவே விட்ட பிறகே, நான் செய்த களவினே'க்கூறி. அத்தாளங்களை வீட்டிலிருந்து கொண்டு வந்து சொந்தக்கார ரிடம் அவைகளை ஒப்புவித்தேன். இந்த தாளங்கள் விஷயமாக வரதராஜுலு நாயகருக்குக் கோபம் பிறந்து இந்திர சபா என் ஆம் நாடகத்தில் நான் நடிக்கமாட்டேன்’ என்று கூறிவிட்டார். அதன் மீது கிர்வாக சபைக் கூட்டத்தில் முதல் முதல் சபையார் ஆட என்ன நாடகம் எடுத்துக் கொள்வது எனும் கேள்வி பிறந்தது. அச்சமயம் காரியதரிசியாகிய முத்து குமாரசாமி செட்டியார் தனக்குத்தெரிந்த சில பழய தமிழ் வித்வான்களைக் கொண்டு எழுதிவைத்த ஒன்றிரண்டு தமிழ்நாடகங்ளைப் படித் துக் காட்டிஞர். அதில் அக்காலத்திய குஜிலிகடை நாடகங் களிலிருந்த ஆபாசங்களெல்லாம் இருந்தன. அதை எழுதிய வித்வான்கள்மீது குற்றங் கூற வந்தவனன்று நான். அவர்கள் பழய வழக்கப்படி யெழுதியிருந்தார்கள். அதற்கு ஒரு உதா ாணத்தைக் கூறுகிறேன். அரசன் சபைக்கு வந்தவுடன், மந்தி ரியைப் பார்த்து, 'மாதம் மும்மாரி பெய்கிறதா ? பிராம்மணர் கள் யாகங்களைச் செய்கிரு.ர்களா ? கூகத்திரியர்கள் சரியாகச் சண்டை போடுகிரு.ர்களா ? வைசியர் சரிவர வியாபாரம் செய்கி மூர்களா ? சூத்திரர்கள் வேலை செய்கிருர்களா?’ என்று கேட்க, ஒவ்வொரு கேள்விக்கும் மந்திரி ' ஆமாம் ' என்று விடை கொடுப்பதாக எழுதியிருந்தது. இதைக் கேட்டவுடன் எனக்கு நகைப்பு வந்து, இந்த ராஜா என்ன மழைபெய்கிறதும் பெய் யாததும் அறியாதவராய் அந்தப்புரத்தில் துரங்கிக்கொண்டிருக் கிறவரா?’ என்று கேட்டேன். இம்மாதிரியாக அதில் உள்ள குற்றங்களை எல்லாம் எடுத்துக் கூறி ஏளனம் செய்யவே, எனது நண்பர்களுக்குக் கோபம் பிறந்து, 'எல்லாவற்றிற்கும் ஏதாவது குறை கூறுகின்ருயே, குற்ற மில்லாதபடி தோன் எழுது” என்று என் மீது திரும்பினர்கள். இது தென்னுலி ராமனுடைய கதை களில் ஒன்றைப் போலிருந்தது. தென்னுலிராமனிடம் ஒருவன் ஒரு நாள் அப்பா, உன் தந்தைக்கு நாளை சிாாத்தம் ' என்று கூறிளுைம். அதற்கு அவன் ஆளுல் அந்த சிராத்தத்தை நீ தான் செய்ய வேண்டும் ' என்று கூறினனும் 'ஏனடா, அப்பா ! உனது தங்தையின் சிராத்தத்தை நான் என் செய்ய வேண்டும்? ' என்று தேட்க, "நீ தானே எனக்கு ஞாபகப்படுத் தினுய், அக்காரணத்தினுல் நீ தான் செய்யவேண்டும் என்று பதில் உரைத்தன ளும் . அம்மாதிரியாக மற்றவர்கள் எழுதிப் நாடகத்திலுள்ள குறைகளை எடுத்துக்கூற, குற்றமில்லாதங்ாடக மாய் எழுதும்படி கான் கேட்கப்பட்ட்ேன். அதன்மீது இளங் கன்று பயமறியாது என்றபடி, கஷ்டத்தை அறியாத வய்ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/25&oldid=727433" இலிருந்து மீள்விக்கப்பட்டது