பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீ0 நாடகமேடை நினைவுகள் மேற்சொன்ன 'சுந்தரி' என்னும் நாடகத்திற்கு நான் ஒரு முறை கணக்கிட்டபடி ஐம்பத்திரண்டு ஒத்திகைகள் நடத்தி ளுேம். தற்காலத்தில் ஏதாவது ஒரு நாடகத்தை எடுத்துக் கொண்டு இாண்டு மூன்று ஒத்திகைகள் நடந்தவுடன் நாடகத் தைப் பயிரங்கமாக நடிக்கலாம் என்று கினேக்கும் எனது சிறு நண்பர்கள் இதைக் கவனிப்பார்களாக, இந்த ஐம்பத்திரண்டு ஒத்திகைகள் பெரும்பாலும் 4 மணி நேரத்திற்குக் குறைந்தன வன்று. சில ஒத்தி கைகள் ஆறு அல்லது ஏழு மணி பிடிக்கும்; அவைகள் முக்கியமாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தியவை யாம். நல்ல வெயிற் காலத்தில் சித்திரை வைகாசி மாதங்களில் கமார் ஒரு மணிக்கு என் வீட்டிலிருந்து என் தகரப்பெட்டி ஒன் றில் நாடகக் காகிதங்களை எடுத்துக் கொண்டு காலால் சபை ஸ்தா பித்திருந்த தம்பு செட்டி தெரு வீட்டிற்குப் போவேன். மற்ற நடிகர்கள் எல்லாம் சீக்கிரம் வந்து சேர்வார்கள். உடனே ஒத் திகை ஆரம்பிப்போம். ஞாயிற்றுக்கிழமை ஒத்திகைகளுக்கெல் லாம் சற்றேறக்குறைய ஒன்றும் த வருமல், -ோ-ாழரீ, வி. திரு மலைப் பிள்ளையாகிய எங்கள் கண்டக்டர் வந்து சேர்வார். அவ ரைப்பற்றி இச்சந்தர்ப்பத்தில் சில விஷயங்களை க்கூற விரும்புகி றேன். அவர் மா.ா-பூl, பசவப் பிள்ளையின் குமார். அப்பொ ழுது தான் லாயர் பரீட்சையில் ச்ே றி, லாயர் ஆனவர். ஆஜானு, பாகுவாய், பெரிய காத்திரமுடையவர் அதற்கேற்றபடி உயரமு முடையவர். இவர் ஜெயராம் நாயகருடைய மைத்தனர். இவர் நாடகங்களில் அக்காலத்தில் மிகவும் ஊக்க முடையவரா! யிருக்தார். இவரை எங்கள் தலைவராகக்கொண்டு இவருக்கு என்ன பெயர்கொடுப்பது என்று நாங்கள் யோசித்த பொழுது, அக்காலத்தில் மற்ற நாடகக் கம்பெனிகளில் வழங்கிய ஸ்டேஜ் மானேஜர்' என்னும் பெயர் எங்களுக்கு இஷ்டமில்லாத படியால், கண்டன் . i என்கிற பெயர்வைத்தோம். சாதாரணமாக ஆங்கி லேய பாஷையில் கண்டக்டா என்கிற பதம், நாடக சங்கர்ப்பத் தில், பக்கவாத்தியக்காரர்களை சரியாக வாசிக்சச் செ ய் யும் தலைமை பெற்றவர்க்கே உபயோகப் படுவது. ஆயினும் பெரி தல்லவென்ற அப்பெயரையே திருமலைப் பிள்ளை அவர்களுக்கு கிர்வாக சபையார் கொடுத்தார்கள். இவர் மற்ற நடர்கள் வ வது போல் சுமார் இாண்டு மணிக்கெல்லாம் வந்து விடுவார். இவரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு, நான் நாடக புஸ்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு. ஒத்திகை ஆரம்பிப் பேன். நாடக பாத்திரர்களும் பாத்திாமில்லாத அங்கத்தினரும் அறையில் சுற்றிலும் உட்காருவார்கள். அறையின் மத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/45&oldid=727455" இலிருந்து மீள்விக்கப்பட்டது