பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நாடகமேடை நினைவுகள் அதில் நாற்றில் ஒரு பங்கில்லை. இதற்குக் காாணம் எனக்கு வயதானது மாத்திரமாய் இருக்கக் கூடுமா? அப்படித்தான் என்று யாராவது எனது நண்பர்கள் எனக்கு ரூபித்தால் மிகவும் சந்தோஷமுள்ளவனுயிருப்பேன். வயதான படியால் என்தேக சக்தி குன்றிய போதிலும், என் உற்சாகமானது, என்னேயே நான் பட்ச பாதமின்றி ஆராயுமிடத்து, கொஞ்சமேனும் குன்ற வில்லை யென்றே நான் கூற வேண்டும். ஆகவே வேறு காரணங் களிருக்க வேண்டுமென்று எனக்குத்தோற்றுகிறது. இனி சுந்திரி நாடகத்திற்குப் பயிரங்க ஒத்திகை நடத்திய கதையை எனது கண்பர்களுக்குக் கூறுகிறேன். ஆரும் அத்தியாயம் ஒத்திகைகள் எல்லாம் சரியாக கடத்தேறியது என்று கிர் வாக சபையார் தீர்மானித்த பிறகு, பயிரங்கமான ஒத்திகை நடத்த வேண்டுமென்று தீர்மானித்தோம். முன்பு புஷ்பவல்லி நாடகத்திற்கு பயிரங்க ஒத்திகை நடத்திய இடம் போதா தன்று எனது நண்பர்கள் கூறவே, என் தந்தையிடம் இச் சமாசாரத்தைக் கூறி, சுமார் 200 பெயர் இருக்கக் கூடிய, இடம் ஒன்று வேண்டுமென்று கேட்டேன். அதற்கு அவர் இசைத்து, நாங்கள் அப்பொழுது குடியிருக்க ஆச்சாரப்பன் விதி 54-வது நம்பருடைய வீட்டிற்குப் பக்கத்து வீடாகிய 53 கதவி லக்க முள்ள வீட்டை, என்ன்ே அழைத்துக்கொண்டு போய்க் காண்பித்து அங்கு மாடியிலுள்ள ஹால், போதுமா என்று கேட்க, அதற்கு கான் ஒப்புக்கொண்டேன். அந்த வீடு எனது நெருங்கிய பந்துவாகிய திருமணம் அண்ணுமலை முகலியாருடை யது. அவர் என் கந்தையின் வேண்டுகோளுக்கிசைந்து, காங்கள் அங்கு பயிாங்க ஒத்திகை நடத்த ஏற்றுக்கொண்டார். என் தகப்பனுர் இந்த ஒத்திகையை தான் கட்டாயமாய்க் காண வேண்டுமென்று வற்புறுத்தினர். முன்பு புஷ்பவல்லி ஒத்திகை கடத்திய பொழுது அவர் வாலாக தென்று நான் மறுத்திருந் தேன். அதற்குக் காரணம் அவர் வந்தால் நானும் எனது சிறு வயதுடைய நண்பர்களும் வெட்கப்படுவோம் என்பதே. இம் முறை அதெல்லாம் உதவாது என்று அவர் பலவந்தப் படுத்தவே, நான் இசைந்தேன். அதன்பேரில் என்தகப்பனர் தானுக கடிதங் கள் எழுதி தனது நண்பர்களுக்கெல்லாம் இந்த நாடகத்தின் பயி ாங்க ஒத்திகைக்கு வரும்படி டிக்கட்டுகளை அனுப்பினர். அன் றியும் தாகைக் கிட்ட இருந்து நாங்கள் நாடகமாடுவதற்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/47&oldid=727457" இலிருந்து மீள்விக்கப்பட்டது