பக்கம்:Siruthondar.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சிறுத்தொண்டர் (அங்கம் 1 இன்றைத்தினம் இதுவரையில் ஒருவரையும் காணுமாய், திருவிதிகளிற் போய்த் தேடிப் பார்க்கச் சென்ருர் என் நாதர். பரமசிவத்தி னருளால் எம்பெருமான் எழுந்தருளப் பெற்றிர் எம்முடைய சிற் றில்லத்திற்கு. தாங்கள் இங்கே சற்று வீற்றிருக்கவேண்டும், என் காதர் அதி விரைவில் வந்து விடுவா ரென்று நம்புகிறேன். தங்களைப் பார்த்தால் மிகவும் பசித்திருப்பதுபோல் காண் கிறது. ஆகவே அவர் வந்தவுடன் அவர் நிவேதனம் செய்யும் உணவை உண்டு, எங்களுக்கு இன்னருள் பாலிக்க வேண்டுகிறேன். மிகவும் சந்தோஷம், நாம் ஒருவாறு பசித்திருக்கிருேம் என்பது உண்மையே. அப் பசியை யாற்றவே நாம் வெகு தாரத்திலிருந்து வந்தது, உனது நாதனுடைய பெயரைக் கேள்விப்பட்டு. ஆயினும் உலக வழக்கின்படி நாம் நடப்பது தர்மமாதலின், புருஷ னில்லாத வீட்டில் நாம் தங்கி யிருப்பது கியாயமன்று. ஆகவே காம் இவ் ஆர். கணபதிச்சு மெனும் ஆலயத்திலிருக்கும் ஆத்தி மரத் தடியில் வீற்றிருப்போம், உனது நாதன் வந்தவுடன் அறிவிப்பாய் காம் வந்த செய்தி. திருவுளப்படி ; ஆயினும் எனது நாதர் வந்தவுடன் தாங் கள் இன்னுரென அவரிடம் அறிவிக்கும் பொருட்டு, தங்க ளுடைய காமதேயம ஊர் முதலியவற்றை அருள் புரிய வேண்டும். நமக்குப் பெயரே கிட்ையாது. ஆயினும் ஏனையோர் நம்மை அவரவர் தம் இச்சைப்படி அழைப்பர், அவற்று ளெல்லாம் நாம் உவந்த பெயர், அடியார்க் கடியான் என்பதே. நமக்கு ஊரொன் மல்ல, எல்லாம் ஒன்றுதான். ஆயினும் நாம் தங்கி யிருப்பது உத்தா தேசமென்று கூறு.-அன்றியும் நாம் மிகவும் பசித்திருப்பதாகவும் கூறு. அங்கனமே. - (சமஸ்கரிக்கிருள்; பரமசிவம் போகிரு.ர்.) அந்தோ ! எனது நாதர் கொஞ்சம் பொறுத்திருப்பாாா யின் இவ் வதிதியைக் கண்டிருப்பாரே. இவ் வேளையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/18&oldid=730204" இலிருந்து மீள்விக்கப்பட்டது