பக்கம்:Siva Temple Architecture etc..pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

பலிபீடம், இவ்விரண்டிற்கும் பின்னல் மகாமண்டபத்தில் ஒரு சிறு மண்டபத்தில் நந்திதேவர் இருப்பார் ; சில சிறு கோயில்களில் நந்திக்கு மண்டப மில்லாதிருக்கலாம். கோயிலுக்குள் புகுந்தவுடன் வலதுபுறமிருந்து இடது புறமாக (பிரதட்சணமாக) சுற்றிவர வேண்டுமென்பது சிவனடியார்கள் அனைவரும் அறிந்த விஷயமே. அப்படி சுற்றிவரும் போது தென்கிழக்கு மூலையில், (அதாவது அக்னி மூலையில்) சில்ப நூலின்படி மடப்பள்ளி கட்டப்பட்டிருக்கும். சாதாரணமாக பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் வினாயகருடைய கோயிலும், வடமேற்கு மூலையில் சுப்பிரமணியருடைய கோயிலும் இருக்கும். இதற்குக் காரணம் கோயிலுக்கு வரும் சேவார்த்திகள் முதலில் வினாயகரையும், பிறகு சுப்பிரமணியரையும் தொழுதுவிட்டு, பிறகே சிவ சந்நிதிக்கும் போகவேண்டு மென்பதாம். பிராகாரத்தின் வட கிழக்கு மூலையில் யாகசாலை மண்டபம் இருக்கும், இது உற்சவ காலங்களில் ஸ்வாமி உள் பிராகாரம் சுற்றிவந்தவுடன், வாஹனத்தின்மீது ஆரோகணிக்குமுன் யாகசாலையில் தீபாராதனையும் ரட்சையும் பெறவேண்டுமெனும் ஆகம விதிக்காகும். முன்னால் குறித்தபடி நடுவில் ஸ்வாமியின் கர்ப்பக்கிரஹமிருக்கும் ; இதற்கு வெளியில் தென்முகமாக அம்மன் சந்நிதி அமைக்கப்பட்டிருக்கும். நந்தி மண்டபத்தின்பின் அர்த்த மண்டபமும், அதற்கும்பின் அந்தரானமுமிருக்கும் ; கடைசியாக மூலஸ்தானம், இந்த மூலஸ்தானத்தின்பேரில் முன்பு கூறியபடி கோயிலின் முக்கிய விமானமிருக்கும். விமானத்தின் உச்சியில் பெரிய கோயில்களில் எல்லாம் தங்கக் கலசங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

சில்ப சாஸ்திரப்படி கர்ப்பக்கிரஹங்கள் நான்குவகைப்பட்டன. (1) சமசதுராஸ்ர விமானம் (Square) (2) விருத்த விமானம் (Circular) (3) ஆய தாஸ்ர விமானம் (Rectangular) (4) விருத்தாயத விமானம் (Oval) தற்காலத்திய கோயில்கள், ஏறக்குறைய எல்லாம், சதுரமான கர்ப்பக் கிரஹங்களும் விமானங்களும் உடையனவாயிருக்கின்றன.

கர்ப்பக்கிரஹத்திற்கு ஒரே வாயில்தா னிருக்கும், அதற்கிருபுரமும் துவாரபாலகர்கள் இருக்கவேண்டியது விதி. கர்ப்பக்கிரஹத்தின் தென்பாரிசத்தில் தட்சிணாமூர்த்தியின் உருவமும்; மேற்கு பக்கம் லிங்கோற்பவரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/20&oldid=1293879" இலிருந்து மீள்விக்கப்பட்டது