பக்கம்:Siva Temple Architecture etc..pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

பூமிமட்டத்தின் கீழ், பிறருக்குத் தெரியாதபடி கட்டப்பட்டனவுமாம். ஆபத்காலங்களில், உற்சவ விக்ரஹங்கள் முதலியவைகளையும், திருவாபரணங்களையும் சேமித்துவைக்க இவைகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டு மென்பது திண்ணம். திருவாலங்காடு சிவாலயத்தில் பல வருடங்களுக்கு முன்பாக, இப்படிப்பட்ட கள்ள அறை யொன்று. இருப்பது கண்டு பிடிக்கப்பட்து. அதிலிருந்த வெள்ளிப் பெட்டி சென்னை மியூஜியம் (museum) எனும் பழைய பொருட் சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது. ராய வேலூரிலும் ஒரு மண்டபத்தின் கீழ் மற்றொரு மண்டபம் ரகசியமாக கட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பூவிருந்த மல்லி வைதீஸ்வரன் கோயிலில் ஒரு கள்ள அறை சில வருடங்களுக்குமுன் கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் பல கோயில்களில், இதுவரையிலும் கண்டு பிடிக்கப்படாத பல ரகசிய அறைகள் இருக்கலாம். சில கோயில்களில் ரகசியமான சுரங்கங்கள் இருக்கின்றன ; உதாரணமாக பெங்களூர் கங்காதரேஸ்வரர் குகைக் கோயிலில் ஒரு பெரிய சுரங்கம் இருப்பதைக் கூறலாம். ஒருவிதத்தில் இப்படிப்பட்ட கள்ள அறைகளும் சுரங்கங்களும் 1310 ஆம் ஆண்டில் மகம்மதியர்கள் தென் இந்தியாவின்மீது படையெடுத்து வந்து ஹிந்து ஆலயங்களை அழிக்க ஆரம்பித்த காலத்தின் பிறகு தான், உண்டானவை யெனக் கூறலாம்.

சிவாலய சூர்ய நமஸ்காரம்

தென் இந்தியாவிலுள்ள சில திராவிட சில்ப சிவாலயங்களில் வருடத்திற்கு ஒருமுறை சூர்ய பூஜை நடப்பதாகச சொல்லப்படுகிறது ; அதாவது வருடத்தில் இரண்டு மூன்று தினங்கள் காலையில் சூர்ய ரஸ்மி அல்லது கிரணம், நேராக சிவலிங்கத்தின்மீது வீழ்கிறது; இப்படி சூர்யபகவான் ஸ்வாமியை நமஸ்கரிப்பதாக ஐதிகம். கோயிலைக் கட்டும் பொழுது சில்பியின் சாதூர்யத்தினால், ஓர் ரந்திரத்தின் வழியாக, வருஷம் ஒருமுறை காலையில் இவ்வாறு சூரிய கிரணங்கள் லிங்கமூர்த்தியின்மீது விழக் கட்டியதாகும். இதற்கு ஒரு உதாரணமாக பூவிருந்தவல்லி வைத்தியநாத ஸ்வாமி ஆலயத்தில் மாசி௴ 22௳ முதல் 29௳ வரையில், மேற்குறித்த சூர்ய பூஜையைக் காணலாம். இன்னும் பல சிவாலயங்களில் இது உளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/22&oldid=1293901" இலிருந்து மீள்விக்கப்பட்டது