பக்கம்:Siva Temple Architecture etc..pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

பல்லவ ஆலயங்களில் ரிஷபங்களை வைக்கும் வழக்கம் இரண்டாவது நரசிம்மவர்மன் காலத்தில்தான் உண்டானது என்று எண்ணப்படுகிறது.

அன்றியும் பல்லவ ஆலயங்களில் பெரும்பாலும் 'உப பீடமே' கிடையாது ; தூண்களில் 'நாகபந்தம்' கிடையாது ; தலைப்புகளில் 'இதழ்' கிடையாது ; தூண்களில் பலகை (Abaces) கிடையாது; போதிகைகள் வளைவு உடையன; போதிகைகளில் 'நாணுதலும்' பூமுனையும் கிடையாது.

பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு, மலைகளில் கோயில்கள் வெட்டுவது நின்றுவிட்டது.

சோழ சிவாலயங்கள்

இவைகளை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம் (1) பழய சோழக் கோயில்கள் (2) பிற்காலத்திய சோழக்கோயில்கள்.

சோழர் காலத்து சிவாலயங்களின் முற்பகுதி சுமார் கி. பி. 650 முதல் 1100 வரை என்று கூறலாம். இக்காலத்து சிவாலயங்கள் பெரிய விமானங்கள் உடையவைகளாயிருந்தன; கோபுரங்கள் மிகவும் சிறியவைகளாயிருந்தன; இவைகளைப் பெரிய வாசற்படிகள் என்றே கூறலாம் ; விமானங்கள் உயரத்தில் அதிகரித்துக்கொண்டே போயின, விமானங்களில் சித்திரிக்கப்பட்ட 'கூடுகளின்', நடுவில் மண்வெட்டி (Shovel) யைப்போன்ற சில்பமானது சிங்க முகங்களாக மாற்றப்பட்டன. கோஷ்டங்களும் மகா தோரணங்களும் கூட்டின் ரூபத்தை யடைந்தன. கோயில்களில் உப பீடங்கள் உண்டாயின; வளைந்த பொதிகைகள் மாறி, நேர் கோடுகள் உடையவைகளாயின. இக்காலத்து கோயில்களுக்கு உதாரணமாக, தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோயிலையும், கங்கைகொண்ட சோழபுரக் கோயிலையும் கூறலாம்.

பிற்காலத்திய சோழக் கோயில்கள்

இக்காலத்திய கோயில்களை அறியும் அடையாளங்கள் :- விமானங்கள் குறுகிக்கொண்டே போயின; கோபுரங்கள் உயர ஆரம்பித்தன; தூண்களின் போதிகைகள் மணி கட்டித் தொங்குவதுபோல செதுக்கப்ப்ட்டன, போதிகைகளுக்கு 'தரங்கு' போதிகைகள் என்றுபெயர், கோஷ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/26&oldid=1293927" இலிருந்து மீள்விக்கப்பட்டது