பக்கம்:Siva Temple Architecture etc..pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

அல்லது மூன்று கூரைகளும் உண்டு. உள் பிராகாரங்களெல்லாம் பெரும்பாலும் மரத்தினாலானவை. சுண்ணாம்பு சுவர்க்ளுக்கு பதிலாக மரத்தால் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.

சாளுக்கிய சில்பக் கோயில்கள்

(கி.பி. 500 முதல் 1300 வரை)

ஆதியில் சாளுக்கியர் குகைக் கோயில்களை வெட்டினர். இதற்கு உதாரணமாக வாதாபி (பாதாமி) குகைக் கோயில்களைக் கூறலாம். இவர்களிடமிருந்துதான் தென்னிந்தியர் குகைக் கோயில்களை வெட்டும் முறையைக் கற்றனர் என்று எண்ணப்படுகிறது.

சளுக்கிய சில்பத்தை இரண்டு பிரிவாகப் பிரித்திருக்கின்றனர். (1) நாகரம்:-இதில் விமானங்கள் கடைசிவரை நான்கு மூலைகளை யுடையவை. (2) வேசரம்:-இவைகளின் விமானங்கள் இந்து ஆரிய (Indo-Aryan) விமானங்களைப் போன்றவை.

ஹொய்சல் சில்பம் -சிலர் சளுக்கிய சில்பத்தின் பிரிவு என்று எண்ணுகின்றனர். மைசூர் ராஜ்யத்தில் பல கோயில்களை ஆராய்ச்சிசெய்த காலஞ்சென்ற ராவ்பகதூர் நரசிம்மாசாரியார் அவர்கள் இதைப் பிரத்தியேகமாக மதிக்கின்றார் இந்த சில்பக் கோயில்களெல்லாம் 3 அடி முதல் 5 அடிவரை உயரமுள்ள அடிப்பீடத்தின்மேல் கட்டப்பட்டவை. பீடமானது பல கோணங்களையுடைய நட்சத்திரங்களைப் போன்றவை. விமானங்கள் படிப்படியா யிருக்கும். இச்சில்பக் கோயில்கள், சாதாரணமாக அடிப்பீட்த்தின் பேரில், மூன்று கர்ப்பக்கிரஹங்களை யுடையனவா யிருக்கும். பெரும்பாலும் மத்தியிலுள்ள கர்ப்பக்கிரஹம் கிழக்கு நோக்கியிருக்கும், இதற்கு சிறிது முன்பாக, வடக்கு பார்த்த கர்ப்பக்கிரஹமொன்று, தெற்குபார்த்த கர்ப்பக் கிரஹமொன்று உன்டயது; இவைகளின் இடையில் இருக்கும் மண்டபத்திற்கு நவரங்கம் என்று பெயர் ஆதியில் இம்மூன்று கோயில்கள், மும்மூர்த்திகளாகிய பிரம்மா, சிவம், விஷ்ணுவுக்காக அமைக்கப்பட்டனவென்று டாக்டர் கஸின்ஸ், கோபிநாத் ராயர் முதலியவர்கள் அபிப்பிராயப் படுகின்றனர்; ஆதிகாலத்தில் மும்மூர்த்திகளும் வணங்கப்

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/29&oldid=1293938" இலிருந்து மீள்விக்கப்பட்டது